Monday, September 4, 2017

உங்களுக்கு மாரடைப்பு ரிஸ்க் உண்டா என எப்படி தெரிந்துகொள்வது?

உங்களுக்கு மாரடைப்பு ரிஸ்க் உண்டா என எப்படி தெரிந்துகொள்வது?

எச்பிஏ1சி அளவுகள் அதிகரிக்க, அதிகரிக்க மாரடைப்பு ரிஸ்கும் அதிகரிக்கும். ஏழு, எட்டு என வருகையில் ரிஸ்க் உயரும் விகிதத்தை இணைப்பில் உள்ள படத்தில் காண்க. ரிஸ்க் உண்டே ஒழிய வந்தே ஆகும் என சொல்லமுடியாது. ஆனால் இது ஹைஸ்பீடில் போவதுபோல் தான் வேகமாக போவதால் மட்டுமே ஆக்சிடண்ட் ஆகும் என சொல்லமுடியாது. ஆனால் விபத்து நடக்கும் சாத்தியகூறுகள் அதிகம்

இத்துடன் ரத்த அழுத்தமும் சேர்கையில் மாரடிப்பு ரிஸ்க் கூடுகிறது. சொல்லபோனால் சுமார் 50% மாரடைப்புகள் ரத்த அழுத்தம் மூலம் வருபவையே. உயர் ரத்த அழுத்தம் நம் இதயத்தின் தசைகளை சோர்வடைய செய்து விடுகின்றன. பணிசெய்து களைத்த நாளங்கள் மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

ரத்த அழுத்தம்+ சர்க்கரை+ ஒபிசிட்டி..இவை மூன்றும் இருந்தால் மெடபாலிக் சிண்ட்ரோம் என வகைபடுத்தபட்டு மாரடைப்பு ரிஸ்க் மிக அதிகம் என சொல்லி அமெரிக்க மருத்துவர்கள் ஸ்டாடினை கொடுக்க துவங்குவார்கள். இதனால் கொலஸ்டிரால் அளவுகள் குறையுமே ஒழிய மரணவிகிதம் குறைவதில்லை.

மாரடைப்பு ரிஸ்க்கை கண்டறிய பயன்படும் சோதனைகள்

ஈ.கே.ஜி எனப்படும் டிரெட்மில் டெஸ்ட்..இது உங்கள் இதயநாளங்கள் எத்தனை வீக் ஆக உள்ளது என கண்டறியும் சோதனை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுக்கலாம்.

கரோனரி கால்சியம் ஸ்கோர்...இதயநாளங்களில் எத்தனை கால்சியம் படிந்துள்ளது என கண்டறியும் சோதனை. அதிக கால்சியம் இருக்க, இருக்க மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். கிட்னிகற்கள் உள்ள்வர்கள், பற்கள், ஈறுகள் வீக் ஆக இருப்பவர்கள், ஆர்த்ரைட்டிஸ் வந்தவர்கள் இதை எடுக்கலாம்.

இதுபோக உள்காயத்தை கண்டறிய எச். எஸ். சி.ஆர்.பி பரிசோதனை உண்டு. ஆனால் உங்களுக்கு சைனஸ், சளி, வைரஸ் தொற்றூ இருந்தாலும் இது அதிகமக காட்டவே செய்யும்.

மற்றபடி ஒரு மாதம் பட்டர் டீ எடுத்த காரணத்துக்காக இந்த டெஸ்ட்டை எல்லாம் செய்யவேண்டும் என அவசியம் இல்லை. :-).
பரம்பரையாக ஹார்ட் அட்டக் இருந்திருந்தால், 45 வயதை தாண்டியிருந்தால், சுகர், ரத்த அழுத்தம், ஒபிசிட்டி ஆகியவற்றில் இரண்டு இருந்து மத்திய வயதினராகவும் இருந்தால், எச்பிஏ1சி 8 தாண்டி இருந்தால் இவற்றை செய்துகொள்வது நலம்

நீங்கள் உண்ணும் எந்த உணவும் கொழுப்பாக மாறி உடலில் சேரவே செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.

No comments:

Post a Comment