Thursday, September 28, 2017

தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்







தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்

தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்

திருமணம் ஆன ஆண்களையும் பெண்களையும் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய சில உணவுவகைகளை சாப்பிடச் சொல்லி, அந்த வீட்டில் இருக்கும் வயதில் மூத்த‍வர்கள் வற்பறுத்துவார்கள். அப்ப‍டி அவர்கள் வற்புறுத்திஅவர்களை சாப்பிட சொல்வதற்கு பலான காரணங்கள் உண்டு. அந்த வகையில் நாம் இங்கு பார்க்க‍விருப்பது என்ன‍வென்றால்

இந்த அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிற ந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு  வருவதால் உடலில் இரத்தம் அதிக ரிக்கும், ஆண்மை பெருகும்…

தேவையான பொருட்கள்

பேரிச்சம்பழம் – அரை கிலோ (விதை நீக்கியது) 
அத்திப்பழம் – அரை கிலோ
சுத்தமான தேன் – அரை கிலோ 
குங்குமப்பூ – சிறிது

செய்முறை :

ஒரு அகண்ட பாத்திரத்தில் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றைப் போ ட்டு அதில் தேனை ஊற்றவும். அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்.பின்பு ஒரு வெள்ளைநிற காட்டன் துணி கொண்டு பாத்திரத்தின் வாய்ப்பகுதியைக் கட்டி வையுங்கள்.

இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் 1/2 மணிநேரம் எடுத்து வெளியில் வைக்க வேண்டும். 4 நாட்கள் இவ்வாறு ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இரவு உறங்கச்செல்லும்முன், அதிலிருந்து இரண்டு அத்திப்பழம் மற்றும் பேரிச்சம்பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்கு ங்கள்.

இதை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இர த்தம் முழுக்க சுத்தமாகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலிலும் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருகவும் வீரியத்தை க் கூட்டவும் வெகுவாக உதவும்.

கண்டிப்பாக மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்

No comments:

Post a Comment