Thursday, September 28, 2017

தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்







தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்

தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்

திருமணம் ஆன ஆண்களையும் பெண்களையும் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய சில உணவுவகைகளை சாப்பிடச் சொல்லி, அந்த வீட்டில் இருக்கும் வயதில் மூத்த‍வர்கள் வற்பறுத்துவார்கள். அப்ப‍டி அவர்கள் வற்புறுத்திஅவர்களை சாப்பிட சொல்வதற்கு பலான காரணங்கள் உண்டு. அந்த வகையில் நாம் இங்கு பார்க்க‍விருப்பது என்ன‍வென்றால்

இந்த அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிற ந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு  வருவதால் உடலில் இரத்தம் அதிக ரிக்கும், ஆண்மை பெருகும்…

தேவையான பொருட்கள்

பேரிச்சம்பழம் – அரை கிலோ (விதை நீக்கியது) 
அத்திப்பழம் – அரை கிலோ
சுத்தமான தேன் – அரை கிலோ 
குங்குமப்பூ – சிறிது

செய்முறை :

ஒரு அகண்ட பாத்திரத்தில் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றைப் போ ட்டு அதில் தேனை ஊற்றவும். அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்.பின்பு ஒரு வெள்ளைநிற காட்டன் துணி கொண்டு பாத்திரத்தின் வாய்ப்பகுதியைக் கட்டி வையுங்கள்.

இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் 1/2 மணிநேரம் எடுத்து வெளியில் வைக்க வேண்டும். 4 நாட்கள் இவ்வாறு ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இரவு உறங்கச்செல்லும்முன், அதிலிருந்து இரண்டு அத்திப்பழம் மற்றும் பேரிச்சம்பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்கு ங்கள்.

இதை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இர த்தம் முழுக்க சுத்தமாகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலிலும் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருகவும் வீரியத்தை க் கூட்டவும் வெகுவாக உதவும்.

கண்டிப்பாக மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்

Wednesday, September 27, 2017

உங்களுக்கு தெரியாம்....?

உங்களுக்கு தெரியுமா?

தமனிகள் (Arteria ) என்பவை தூய்மையான இரத்தத்தையும், சிரைகள்(Veins) என்பவை அசுத்த இரத்தத்தையும் உடல் முழுவதும் கடத்துபவை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

சிரைகள் மேலோட்டமாகவும், தமனிகள் உடலின் ஆழமான பகுதிகளிலும் உள்ளதாகவும் அதே நவீன மருத்துவம் சொல்கிறது.

தற்போது நவீன மருத்துவத்தால், செய்யப்படும் அனைத்து இரத்த பரிசோதனைகளும் சிரைகள் (Veins) என்று சொல்லப்படும் அசுத்த / சுத்தமில்லாத இரத்தத்திலேயே செய்யப்பட்டு அதில் உங்களுக்கு சர்க்கரை இருக்கு, உப்பு இருக்கு, மிளகாத்தூள், மல்லித்தூள் இருக்குனு சொல்கிறார்களே? என்று என்றாவது யோசித்து பார்த்ததுண்டா?

சிரை (Veins) ல் செல்லும் இரத்தம் அசுத்த இரத்தம்னு நீங்களே சொல்றீங்க? அப்புறம் அதை எதுக்கு எடுத்து டெஸ்ட் பார்க்கிறீங்க?

சரி இன்னொரு விசயத்துக்கு வருவோம்.
நவீன மருத்துவத்தினால் உடலினுள் செலுத்தப்படும் அனைத்து இரசாயன மருந்துகளும் சிரை(Vein) மூலமாகவே செலுத்தப்படுகிறது.  ( நர்ஸ், மருந்து ஏத்த வெயின்னே (Vein) கிடைக்கலங்கனு எப்பவோ சொன்னது நியாபகம் வருதா?)

இப்ப சொல்லுங்க ஏற்கனவே அசுத்தமா இருக்கிற இரத்தத்துல, மருந்துகளை ஏத்தினா கெட்டு போகாதா? மருந்துகள் வேதிவினை புரியும் கேள்விப்பட்டிருக்கோம். அந்த மருந்துகள், அந்த இரத்தத்துல இருக்கிற உப்பு, சர்க்கரை, அயோடின், கால்சியம் னு சொல்லற வேதிபொருள்களோடு வினை புரியாதா?

இதை எல்லாம் படிச்சிட்டு அட ஆமால்ல இத்தனை நாளா யோசிக்கலயேனு நீங்க நினைச்சா நீங்க இயற்கை பக்கம் திரும்புறீங்கனு அர்த்தம்.

இல்ல நான் அலோபதி மருத்துவம்தான் பார்ப்பேன், கேட்பேன் இல்ல ஆதாரம் கொடுத்தா தான் நம்புவேண்ணு சொன்னா உங்களவிட அறிவாளி உலகத்துலயே யாரும் இல்லங்க. ஆனா நீங்க படிக்க வேண்டியது ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகம் மட்டும்தான்னு மனசுல வச்சிகோங்க....! ஏன்னா ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்திலேயே நீங்க கேட்கின்ற ஆதாரம் எல்லாம் தெளிவா போட்டிருக்குங்க...

உண்மைகள் தொடரும்....!

Monday, September 4, 2017

உங்களுக்கு மாரடைப்பு ரிஸ்க் உண்டா என எப்படி தெரிந்துகொள்வது?

உங்களுக்கு மாரடைப்பு ரிஸ்க் உண்டா என எப்படி தெரிந்துகொள்வது?

எச்பிஏ1சி அளவுகள் அதிகரிக்க, அதிகரிக்க மாரடைப்பு ரிஸ்கும் அதிகரிக்கும். ஏழு, எட்டு என வருகையில் ரிஸ்க் உயரும் விகிதத்தை இணைப்பில் உள்ள படத்தில் காண்க. ரிஸ்க் உண்டே ஒழிய வந்தே ஆகும் என சொல்லமுடியாது. ஆனால் இது ஹைஸ்பீடில் போவதுபோல் தான் வேகமாக போவதால் மட்டுமே ஆக்சிடண்ட் ஆகும் என சொல்லமுடியாது. ஆனால் விபத்து நடக்கும் சாத்தியகூறுகள் அதிகம்

இத்துடன் ரத்த அழுத்தமும் சேர்கையில் மாரடிப்பு ரிஸ்க் கூடுகிறது. சொல்லபோனால் சுமார் 50% மாரடைப்புகள் ரத்த அழுத்தம் மூலம் வருபவையே. உயர் ரத்த அழுத்தம் நம் இதயத்தின் தசைகளை சோர்வடைய செய்து விடுகின்றன. பணிசெய்து களைத்த நாளங்கள் மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

ரத்த அழுத்தம்+ சர்க்கரை+ ஒபிசிட்டி..இவை மூன்றும் இருந்தால் மெடபாலிக் சிண்ட்ரோம் என வகைபடுத்தபட்டு மாரடைப்பு ரிஸ்க் மிக அதிகம் என சொல்லி அமெரிக்க மருத்துவர்கள் ஸ்டாடினை கொடுக்க துவங்குவார்கள். இதனால் கொலஸ்டிரால் அளவுகள் குறையுமே ஒழிய மரணவிகிதம் குறைவதில்லை.

மாரடைப்பு ரிஸ்க்கை கண்டறிய பயன்படும் சோதனைகள்

ஈ.கே.ஜி எனப்படும் டிரெட்மில் டெஸ்ட்..இது உங்கள் இதயநாளங்கள் எத்தனை வீக் ஆக உள்ளது என கண்டறியும் சோதனை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுக்கலாம்.

கரோனரி கால்சியம் ஸ்கோர்...இதயநாளங்களில் எத்தனை கால்சியம் படிந்துள்ளது என கண்டறியும் சோதனை. அதிக கால்சியம் இருக்க, இருக்க மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். கிட்னிகற்கள் உள்ள்வர்கள், பற்கள், ஈறுகள் வீக் ஆக இருப்பவர்கள், ஆர்த்ரைட்டிஸ் வந்தவர்கள் இதை எடுக்கலாம்.

இதுபோக உள்காயத்தை கண்டறிய எச். எஸ். சி.ஆர்.பி பரிசோதனை உண்டு. ஆனால் உங்களுக்கு சைனஸ், சளி, வைரஸ் தொற்றூ இருந்தாலும் இது அதிகமக காட்டவே செய்யும்.

மற்றபடி ஒரு மாதம் பட்டர் டீ எடுத்த காரணத்துக்காக இந்த டெஸ்ட்டை எல்லாம் செய்யவேண்டும் என அவசியம் இல்லை. :-).
பரம்பரையாக ஹார்ட் அட்டக் இருந்திருந்தால், 45 வயதை தாண்டியிருந்தால், சுகர், ரத்த அழுத்தம், ஒபிசிட்டி ஆகியவற்றில் இரண்டு இருந்து மத்திய வயதினராகவும் இருந்தால், எச்பிஏ1சி 8 தாண்டி இருந்தால் இவற்றை செய்துகொள்வது நலம்

நீங்கள் உண்ணும் எந்த உணவும் கொழுப்பாக மாறி உடலில் சேரவே செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.

வெரிக்கோஸ் வெயின்

மூலிகை மருத்துவம்: வெரிக்கோஸ் வெயினுக்கு விடைகொடுப்போம்!

நமது உடலில் ஏராளமான ரத்தக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று உடலின் அனைத்து பாகங்களையும் இருதயத்தோடு இணைக்கின்றன.

விலங்குகளைப் போல் அல்லாமல் மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதால் இருதயத்திலிருந்து வயிறு, கால், பாதம் போன்றவற்றிற்கு செல்லும் ரத்தம் மீண்டும் ஆக்சிஜன் கலப்புக்காக புவியீர்ப்பு விசையையும் மீறி இதயத்திற்கு வருவதற்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாடிகளும், ஆக்சிஜன் செலவழிந்து போன ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரைகளும் தங்கள் அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டுள்ளன. சிரைகளில் காலில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக வால்வுகள் உள்ளன.

இவை காலிலிருந்து இதயத்திற்கு கிளம்பும் ரத்தத்தை புவியீர்ப்பு விசை மற்றும் நமது எடையின் காரணமாக மீண்டும் கீழே இறங்கிவிடாமல் தடுக்கின்றன.

இந்த வால்வுகளில் தொல்லை ஏற்பட்டாலோ, ரத்தக் குழாய்களில் தளர்ச்சி ஏற்பட்டாலோ ரத்தக்குழாய்கள் தடித்து, விரிந்து, சுருண்டு ரத்தத்தை உறையவைத்து, குறிப்பிட்ட இடத்தில் தேங்கச் செய்துவிடும். இந்த தொல்லையை நவீன அறிவியல் வெரிக்கோஸ் வெயின், நாளப்புடைப்பு, நாளஅடைப்பு, நரம்பு புடைப்பு என்றும் குறிப்பிடுகிறது. நீண்டநேரம் நின்று பணிபுரிபவர்களுக்கும், பிறவியிலேயே ரத்தக்குழாய்களில் வால்வு பலஹீனம் உடையவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் ரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டவருக்கும், அடிவயிற்றில் கடும் அழுத்தம் கொடுத்து நின்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், வயிற்றை இறுக்கும் ஆடை அணிபவர்களுக்கும், நீண்டநேரம் காலை தொங்கவிட்டுக்கொண்டே உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கும் காலின் ரத்தக்குழாயில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படும்பொழுது கால் முழுவதும் கனமாக உணருதல், காலில் ரத்தக் குழாய்கள் புடைத்து காணப்படுதல், கணுக்கால்களில் வீக்கம், முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதிகள் கருஞ்சிவப்பாக மாறுதல், காலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் நிற்காமல் பீச்சி அடித்தல், புண்கள் தோன்றி பல ஆண்டுகள் ஆறாமல் இருத்தல் ஆகியன வெரிக்கோஸ் வெயினின் அறிகுறிகளாகும்.

வெரிக்கோசால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கும்போதோ அல்லது அமர்ந்திருக்கும்போதோ காலை சற்று தூக்கிக் கொண்டு படுக்க வேண்டும். அதிகமான நரம்பு புடைப்பு காணப்பட்டால் காலை இறுக்கி கட்டும் இழுவை கச்சை துணிகளை அணிய வேண்டும். பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பும், மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், நீண்டநேரம் நிற்கும் காவல் பணியாளர்கள், இஸ்திரி செய்பவர்கள் வெரிக்கோஸ் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். நாட்பட்ட வெரிக்கோஸ் தொல்லையில் ரத்தம் உறைந்து, இதய நோயாகவும் மாறும் வாய்ப்பும், புண்கள் சீழ்பிடித்து கால் அழுகும் வாய்ப்பும் உள்ளதால் சிலருக்கு அறுவை சிகிச்சை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. நாளப்புடைப்பை கட்டுப்படுத்தி, ரத்தக்குழாய்களுக்கு வலுவையும் அவற்றின் வால்வுகளுக்கு பலத்தையும் தருவதுடன் வீக்கத்தையும் ஒவ்வாமையையும் நீக்கி, ரத்த ஓட்டத்தை சீர்செய்யும் பழம்தான் ஆரஞ்சு.

சிட்ரஸ் சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும் மருந்தாகவும், வழிபாட்டு மூலிகையாகவும் பயன்படுகின்றன. ஆரஞ்சில் காணப்படும் ஹெஸ்பெரிடின், ரூட்டின், நாரிஜெனின், வைட்டமின் ஏ, தையமின், பைரிடாக்சின், போலேட் போன்ற வைட்டமின் பி, வைட்டமின் சி, கரோட்டின்கள், சேந்தின்கள், பொட்டாசியம், கால்சியம் ஆகியன சிறந்த பயோபிளேவனாய்டுகளாக செயல்பட்டு, நாளப் புடைப்புக்கும் அதனால்
ஏற்பட்ட புண்களை ஆற்றவும் பெரிதும் உதவுகின்றன.

பயோபிளேவனாய்டுகள் நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு 60 முதல் 120 மிலி தினமும் ஒரு வேளை இளஞ்சூடான நீருடன் கலந்து சாப்பிட்டு வர நுண்ணிய குழாய்களில் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆரஞ்சு பழச்சாற்றை கடுக்காய்த்தூளுடன் சேர்த்து பிசைந்து, இளந்தீயில் சூடாக்கி, மெழுகுபதம் வந்ததும் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 2 முதல் 4 கிராம் பொடியை மாலையில் 100 மி.லி., வெந்நீரில் கலந்து குடித்துவர நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் ரத்தக்குழாய் அதைப்பு நீங்கும். ஆரஞ்சு பழத்தை சாலட், ஜுஸ், ஜாம், ஜெல்லி அல்லது டீ போன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் உட்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்ளலாமா?

பழங்களில் உள்ள நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள் குளூக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன. பெர்ரி, ஆப்பிள், பேரிட்சை, நாவல் போன்றவற்றில் போதுமான அளவு நார்ச்சத்தும், மெக்னீசியமும் உள்ளதால் அன்றாடம் குறைந்தளவில் இதனை உட்கொள்ளலாம். மருந்துக்கடைகளில் கிடைக்கம் சிட்ரஸ் பிளேவனாய்டுகள் சேர்ந்த சி.வி.பி. கேப்சூல் தினமும் ஒன்று சாப்பிட்டுவர நாளப்புடைப்பு மற்றும் அதனால் தோன்றிய புண்கள் விரைவில் ஆறும்.