Saturday, July 30, 2016

சிரி....சிரி.....சிரி

யிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி...

பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி..'

என நல்ல சிரிப்பின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் பழைய தமிழ்ச் சினிமாவின் பாடல் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்க

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி... பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி..' என நல்ல சிரிப்பின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் பழைய தமிழ்ச் சினிமாவின் பாடல் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கும். "சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன்' என்பார்கள். தனியாகச் சிரித்தால் பல அர்த்தம் உண்டு.. ஆனால், குழுவாக இணைந்து கொண்டாடி சிரித்தால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்கின்றனர் யோகா

ஆசிரியர்கள்.

சிரிப்பதால் மனவலி, உடல் வலி, நோயினால் ஏற்படும் வலிகளின் தாக்கம் குறைவதோடு, மூளையில் "செரட்டின்' சுரப்பியின் உற்பத்தி பெருகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  நெருக்கடி, ஆபத்துக் காலங்களில் சிரித்து சமாளித்தால் மூளையில் "கார்டிசான் ஸ்டீராய்டு' சுரந்து மனதை இயல்பாக வைத்துக் கொள்ள உதவும் என மருத்துவ நூல்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாம் ஒவ்வொருவரும் தற்போது இயந்திரத்தனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கிராமங்களைவிட நகரத்தில் வாழும் மக்கள் நாள் முழுவதும் பரபரப்பாகவே இயங்கும் நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

வேலைப் பளு, குடும்பச் சூழல், பொருளாதாரப் பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் பதற்றம், பயம், சினம், கவலை என மகிழ்ச்சியை இழந்து மன அழுத்தத்துடன் காலத்தை கழித்து வருகிறோம்.

உலகம் முழுவதும் இதே நிலைதான்! ஆனால், வெளிநாடுகளில் மனதிற்குள் இருக்கும் கவலைகளை மறக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பல்வேறு பயிற்சிகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். சில நாடுகளில் தனியாக ஆற்றுப்படுத்துதல் மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மன அழுத்தத்தைப் போக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்பட்டாலும் நமது நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைகளில் ஒன்றுதான் சிரிப்பு தியானம்.

கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் நடைமுறையில் உள்ள இந்தச் சிரிப்புப் பயிற்சியால் 40 சதம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்த வழிமுறையை தமிழகத்தில் முதல் முறையாக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஒருமணி நேரம் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.

இந்தத் தியானத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் ஒழுக்க நெறியுடன் தன் வாழ்க்கையை அமைத்து தனக்கோ, பிறருக்கோ தீங்கு விளைவிக்காத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சூரியோதயத்தின் போதே கண்விழித்து, உடலை வளைத்து நெளித்து ஆயத்தம் செய்து 15 நிமிஷங்கள் சிரிக்கவேண்டும். இதனால், ஒவ்வொருவரும் அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.

சிரிப்பில்
அன்புச் சிரிப்பு,
அசட்டுச் சிரிப்பு,
அதிகாரச் சிரிப்பு,
ஆணவச் சிரிப்பு,
அருள் பொழியும் சிரிப்பு,
ஆத்ம சிரிப்பு,
ஆரவாரச் சிரிப்பு,
இகழ்ச்சி சிரிப்பு,
வெற்றிச் சிரிப்பு,
சாதனைச் சிரிப்பு எனப் பல வகை உண்டு. 
சிரிப்பு ஒரு மனிதனின் உடல் உள் சூழலைப் பொருத்து மாறுபட்டு, உடல் நிலை நலனும் மாறுபடுகிறது.
ஒரு சில வகையான சிரிப்பு உடல் நலத்துக்குச் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். ஆனால், இத்தகைய உணர்வு நிலைகளைச் சாராமல் எந்தவிதக் காரணமும் இன்றி சிரிப்பதுதான் சிரிப்பு தியானத்தில் சிறப்பாகும்.

இந்தச் சிரிப்புப் பயிற்சியால் நம்முள் உள்ள எல்லைகளும், வேறுபாடுகளும் கலைந்து சோகமான எண்ணங்கள் மறந்துவிடும்.

இதனால், மனவளம் சிறப்பாற்றல் அடைவதால் வாழ்க்கையும் சிறந்து விளங்கும். சிரிப்புத் தியானத்தை காலை அல்லது மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் தனியாகவோ, குழுவாக இணைந்தோ பயிற்சி செய்யலாம். பயிற்சி முடிந்ததும் நண்பர்களிடம் அன்பையும், நட்புணர்வையும் முகமலர்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதால், தங்கள் மனதில் உள்ள மன அழுத்தம், துக்கம் ஆகியவற்றை மறந்து வளமான வாழ்வை வாழமுடியும்.

ஒருவர் சிரிப்பதையே மறக்கத் தொடங்கினால் புரதம் குறைந்து மறதியை அதிகரிக்கும் "அல் ஸமர்' நோயும், அறிவுத் திறனைக் குறைக்கும் "டிமென்ஷியா' நோயும், நினைவுகளை மனதில் பதியச் செய்யும் திசுக்களைப் பாதிக்கும் "ஹிப்போகம்பஸ்' நோயும் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதையெல்லாம் போக்க செலவில்லாத ஒரே மருந்து சிரிப்புத் தியானம்தான்.

No comments:

Post a Comment