Saturday, July 30, 2016

சிரி....சிரி.....சிரி

யிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி...

பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி..'

என நல்ல சிரிப்பின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் பழைய தமிழ்ச் சினிமாவின் பாடல் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்க

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி... பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி..' என நல்ல சிரிப்பின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் பழைய தமிழ்ச் சினிமாவின் பாடல் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கும். "சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன்' என்பார்கள். தனியாகச் சிரித்தால் பல அர்த்தம் உண்டு.. ஆனால், குழுவாக இணைந்து கொண்டாடி சிரித்தால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்கின்றனர் யோகா

ஆசிரியர்கள்.

சிரிப்பதால் மனவலி, உடல் வலி, நோயினால் ஏற்படும் வலிகளின் தாக்கம் குறைவதோடு, மூளையில் "செரட்டின்' சுரப்பியின் உற்பத்தி பெருகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  நெருக்கடி, ஆபத்துக் காலங்களில் சிரித்து சமாளித்தால் மூளையில் "கார்டிசான் ஸ்டீராய்டு' சுரந்து மனதை இயல்பாக வைத்துக் கொள்ள உதவும் என மருத்துவ நூல்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாம் ஒவ்வொருவரும் தற்போது இயந்திரத்தனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கிராமங்களைவிட நகரத்தில் வாழும் மக்கள் நாள் முழுவதும் பரபரப்பாகவே இயங்கும் நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

வேலைப் பளு, குடும்பச் சூழல், பொருளாதாரப் பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் பதற்றம், பயம், சினம், கவலை என மகிழ்ச்சியை இழந்து மன அழுத்தத்துடன் காலத்தை கழித்து வருகிறோம்.

உலகம் முழுவதும் இதே நிலைதான்! ஆனால், வெளிநாடுகளில் மனதிற்குள் இருக்கும் கவலைகளை மறக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பல்வேறு பயிற்சிகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். சில நாடுகளில் தனியாக ஆற்றுப்படுத்துதல் மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மன அழுத்தத்தைப் போக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்பட்டாலும் நமது நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைகளில் ஒன்றுதான் சிரிப்பு தியானம்.

கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் நடைமுறையில் உள்ள இந்தச் சிரிப்புப் பயிற்சியால் 40 சதம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்த வழிமுறையை தமிழகத்தில் முதல் முறையாக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஒருமணி நேரம் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.

இந்தத் தியானத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் ஒழுக்க நெறியுடன் தன் வாழ்க்கையை அமைத்து தனக்கோ, பிறருக்கோ தீங்கு விளைவிக்காத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சூரியோதயத்தின் போதே கண்விழித்து, உடலை வளைத்து நெளித்து ஆயத்தம் செய்து 15 நிமிஷங்கள் சிரிக்கவேண்டும். இதனால், ஒவ்வொருவரும் அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.

சிரிப்பில்
அன்புச் சிரிப்பு,
அசட்டுச் சிரிப்பு,
அதிகாரச் சிரிப்பு,
ஆணவச் சிரிப்பு,
அருள் பொழியும் சிரிப்பு,
ஆத்ம சிரிப்பு,
ஆரவாரச் சிரிப்பு,
இகழ்ச்சி சிரிப்பு,
வெற்றிச் சிரிப்பு,
சாதனைச் சிரிப்பு எனப் பல வகை உண்டு. 
சிரிப்பு ஒரு மனிதனின் உடல் உள் சூழலைப் பொருத்து மாறுபட்டு, உடல் நிலை நலனும் மாறுபடுகிறது.
ஒரு சில வகையான சிரிப்பு உடல் நலத்துக்குச் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். ஆனால், இத்தகைய உணர்வு நிலைகளைச் சாராமல் எந்தவிதக் காரணமும் இன்றி சிரிப்பதுதான் சிரிப்பு தியானத்தில் சிறப்பாகும்.

இந்தச் சிரிப்புப் பயிற்சியால் நம்முள் உள்ள எல்லைகளும், வேறுபாடுகளும் கலைந்து சோகமான எண்ணங்கள் மறந்துவிடும்.

இதனால், மனவளம் சிறப்பாற்றல் அடைவதால் வாழ்க்கையும் சிறந்து விளங்கும். சிரிப்புத் தியானத்தை காலை அல்லது மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் தனியாகவோ, குழுவாக இணைந்தோ பயிற்சி செய்யலாம். பயிற்சி முடிந்ததும் நண்பர்களிடம் அன்பையும், நட்புணர்வையும் முகமலர்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதால், தங்கள் மனதில் உள்ள மன அழுத்தம், துக்கம் ஆகியவற்றை மறந்து வளமான வாழ்வை வாழமுடியும்.

ஒருவர் சிரிப்பதையே மறக்கத் தொடங்கினால் புரதம் குறைந்து மறதியை அதிகரிக்கும் "அல் ஸமர்' நோயும், அறிவுத் திறனைக் குறைக்கும் "டிமென்ஷியா' நோயும், நினைவுகளை மனதில் பதியச் செய்யும் திசுக்களைப் பாதிக்கும் "ஹிப்போகம்பஸ்' நோயும் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதையெல்லாம் போக்க செலவில்லாத ஒரே மருந்து சிரிப்புத் தியானம்தான்.

கம்மல் போட்டால் தைராய்டு தாக்காது!

உலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள். அந்தப் பற்களைப் பதம் பார்க்கும் பிரச்னைகளும் அக்கு பிரஷர் தருகிறபோது பல்லிளித்து ஒதுங்கிவிடுகின்றன. பொதுவாக பற்கள் முக அழகைக் கூட்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே பற்கள் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டும் இண்டிகேட்டர் என்பது தெரியுமா?

ஆம், மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அதே போல, அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன. அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது. மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம் பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.

பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள ‘கிட்னி சக்தி புள்ளி’களை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமான பற்கள் முளைக்கத் துவங்கும்.

எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்னை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த ‘விரல்நுனி அழுத்தம்’ கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும். அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.

பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்து தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.

அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்கு சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி:பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது. சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.

இனி சற்று கீழிறங்கி கழுத்து பிரச்னைகளைப் பார்க்கலாம். ‘எலும்பு தேய்வதாலேயே கழுத்து வலிக்கிறது’ என்பதுதான் தற்போதைய பரவலான கருத்து. அந்த எண்ணத்துடனேயே ‘நெக் காலர்’, ‘டிராக்ஷன்’ என சிகிச்சை எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள். கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்புவதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதை மேல்நோக்கி இழுக்கும் ‘டிராக்ஷன்’ சிகிச்சையால் ‘ரைநெக்’ (wry neck) என்ற பிரச்னை ஏற்படலாம். அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமையாகத் திருப்புவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்.

கட்டைவிரலைத் தொடர்ந்து சுழற்றியும், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியை மெதுவாக அழுத்தி விட்டும் கழுத்து வலியைக் குணப்படுத்தலாம் என்கிறது அக்கு பிரஷர். ‘சூஜோக்’ வளையமும் கழுத்துவலி தீர்ப்பதில் பயன்படுகிறது.

பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன்கழுத்துக் கழலை’. தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காததாலோ ஏற்படுகிறது.

அக்கு பிரஷரில் ‘தைராய்டு பாதிப்பு’ இருக்கிறதா அல்லது ஏற்படலாமா என்பதைக்கூட முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங்கையில் அழுத்தும்போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு சிகிச்சையும் அதே ‘கட்டைவிரல் - உள்ளங்கை’ அழுத்தமே.

காதில் உள்ள தைராய்டுக்கான அக்கு புள்ளியைத் தூண்டியும் இந்தக் கழலை நோயைக் குணப்படுத்தலாம். இதற்கு காதணி/ தோடு போன்ற அணிகலன்களே போதுமானது. இந்த இடத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய். காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!

ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

* பல் துலக்கும்போது பிரஷ்ஷை நீள்வட்டமாக சுழற்றி துலக்குவது நல்லது.

* அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் கொப்பளித்தால், பற்கள் ஆரோக்கியம் பெறும்.

* பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்க, குணமாகும்.

* கீரை வகைகள், சுண்டக்காய், பால் பொருட்கள் பற்களுக்கு வலிமை சேர்ப்பவை.

* படிக்கிறபோது எழுத்துகள் இரு புருவங்களுக்கு மையத்தில் இருக்குமாறு படித்தால், கழுத்து வலியிலிருந்து தப்பிக்கலாம்.

* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

நலம் தரும் முத்திரைகள்

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் 
ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். 

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------

 கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் -ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. 

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!
-----------------------------------------------------------------

 தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை,டென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
-------------------------------------------------------------

 மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க!
------------------------------

 காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!
--------------------------------------------------------------

 மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
-----------------------------------------------------------

 இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
------------------------------------------------------

 உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
----------------------------------------------------------------------

 நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங்க முத்திரை!
---------------------------------------------------------

 இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
---------------------------------------------------------------

 நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....
-----------------------------------------------------------------------------

 வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
--------------------------------------------------------------

 இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்                          அரோக்கிய வாழ்வே = நிறைந்த செல்வம்

சிரிப்பு தியானம்

ஓசோவின் – சிரிக்கும் புத்தர் தியானம்

சிரிக்கும் புத்தர் தியானம்
ஓசோ அறிமுகப்படுத்திய
விசேடமான தியான முறைகளில் ஒன்று.

அவரது பார்வையில்….
இந்த உலகை உணர்ச்சிமிக்கதாகவும்
விளையாட்டு நிறைந்ததாகவும் உருவாக்குவதே
நம் விருப்பம்.

சிரிப்புத்தான் ஆன்மிகத்தின் அடிப்படைத் தன்மை என்பதை
இந்த உலகுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

எங்களால் சிரிக்க முடியவில்லை எனில்
எங்களது வாழ்வில் அநேக விடயங்களை
நாம் இழந்துவிடுவோம்.

சிரிப்பு எங்களை கள்ளம் கபடம் அற்ற
குழந்தையாக்குகின்றது.

எங்களது சிரிப்பு
இந்த இயற்கையுடன் இணைந்துவிடுகின்றது.

ஆர்ப்பரிக்கும் கடலோடும் நட்ச்சத்திரங்களோடும்
அவைகளின் அமைதியோடும் இணைந்துவிடுகின்றது.

நாங்கள் சிரிப்பதன்
மூலம் இந்த உலகின் அறிவுள்ள
ஒரு பகுதியை தனியாக அமைக்கின்றோம்.

ஏனென்றால் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிரிக்கமுடியும்.

ஆதனால் தான் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை.

அவைகளுக்கு அதிக அறிவு கிடையாது.
“எதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக் கொள்ளவேண்டும்.
விளையாட்டாக (playfulness )எடுத்துக்கொள்ளக் கூடாது”
என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

ஏதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக்கொள்வதால்
சமூகத்தில் மரியாதை கிடைக்கின்றது.

மரியாதைக்காக நாம் எதையும்
விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

எல்லாவற்றையும் பெரியவிடயமாக எடுப்பது
நம்மை நோயாளியாக்கிவிடும் என்பதை
கற்பிப்பவர்கள் மறந்துவிடுகின்றனர்.

நம்மிடம் சிரிக்கும் உணர்வு மங்கிப்போய்விட்டது.
மரணித்துவிட்டது. 
இல்லை என்றால் எங்களைச் சுற்றிலும் உள்ள
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான விடயங்கள் நிறையவே உள்ளன.

எங்களிடம் சிரிக்கும் உணர்வு இருந்தால்
கவலைப்படுவதற்கு நேரம் இல்லாமல்
முழுநேரமும் சிரித்துக் கொண்டே இருக்குமளவுக்கு
பல விடயங்கள் உள்ளன என்பது தெரிந்தால்
நாம் ஆச்சரியப்படுவோம்.

ஏதாவது ஒன்று எங்கேயாவது
சிரிக்கும் படி நடந்துகொண்டே இருக்கும்.

எனவே மனித வாழ்வில்
நாம் மறந்துவிட்ட சிரிப்பைக் கொண்டுவருவது தான்
நம் வேலை.

சிரிப்பை மற்ந்துவிட்டால்
நாம் பாடுவதை மறந்துவிடுவோம்
ஆடுவதை மறந்துவிடுவோம். 
அன்பை மறந்துவிடுவோம்.

சிரிப்பை மட்டும் நாம் மறக்கவில்லை
இதனுடன் சேர்ந்து வேறு பல விடயங்களையும் மறந்துவிட்டோம்.

சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சிரிப்பது புனிதமானது.

மேலும் சிரிப்பைப் பற்றி ஓசோ கூறுகிறார்,
ஆன்மீக அனுபவங்களில்; மிகவும் முக்கியமானது சிரிப்பு,
ஒரு மனிதரால்
எதையும் அடி மனதில் அடக்கி வைக்காமல்
முழுமையாகவும் இதயபூர்வமாகவும் சிரிக்க முடியுமாயின்
அந்தக் கணத்தில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறலாம்
ஏனெனில் முழுமையான சிரிப்பு
(ego) துன்முனைப்பற்றது
இது தான் உண்மையை
மேய்ஞானத்தை அறிவதற்கான ஓரே வழி;.
உண்மையாகவும் முழுமையாகவும் சிரியுங்கள்.
சிரிக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்.
சிரிப்பு ஒரு வழிபாடு.

சிரிப்பில் பலவகை உண்டு. வழமையாக மற்றவர்களின் குறைகளை, தவறுகளை,முட்டாள் தனங்களை பார்த்து எண்ணி சிரிப்பும்.

இது கீழ்த்தரமான சிரிப்பு. மற்றவர்களின் செலவில் சிரிப்பது சாதாரணமான சிரிப்பு மட்டுமல்ல அசிங்கமானதுமாகும்.

இது வன்முறையானதும் அத்துமீறியதுமாகும்.
இது மற்றவறை நோகப்பண்ணுவதாகும். நும் அடி மனதில் பழிவாங்கும் உணர்வை இந்த சிரிப்பு கொண்டிருக்கும்.

இரண்டாவது சிரிப்பு நம்மைப் பார்த்து நாமே சிரிப்பது. இது பெறுமதியானது. 
இது பண்பானது. தன்னைப் பார்த்து சிரிக்கும் மனிதர் மதிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் முதலாவமவர்களைவிட மேலானவர்கள். இவர்கள் வன்முறை, வெறுப்பு, அத்துமீறல் என்பவற்றைக் கடந்தவர்கள்.

மூன்றாவது சிரிப்பு பிரபஞ்ச சிரிப்பு. ஒரு சம்பவத்தைப் பார்த்:து முழுமையாக சிரிப்பது. ஏதிர்கால பலன் எதனையும் எதிர்பாராது சிரிப்பது.
ஆரம்பமில்லாத ஆரம்பம் இந்த சிரிப்பு.
முழு பிரபஞ்சமுமம் எந்த ஒரு நோக்கமுமின்றி
எந்த ஒரு குறித்த புள்ளியையும் நோக்கியல்லாது
முடிவற்ற பிரதேசத்தில் பயணிப்பது.
இதைப் பார்த்து சிரிப்பது. இதிலிருந்து சிரிப்பு உருவாகும்.
இதை உருவாக்க ஆரம்பத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
இதை முடிக்கவும் இறுதியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
அழகாக ஒழுங்காக பகுத்தறிவோடு பயணிக்கும் இந்த பிரபஞ்சம். 

இதைப் பார்ப்போமானால் சிரிப்பு தவிர்க்க முடியாதது.
இது ஆன்மிகச் சிரிப்பு.

இது மட்டுமின்றி சிரிப்பதனால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு மனதுக்கு ஆன்மாவுக்கு கிடைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

சிறந்த உடல் இயங்கு சக்தி நடைபெறுகின்றது. 

தசைகள் அமைதியடைகின்றன. 

மன அழுத்தம் கோவம் குறைகின்றது.

ஊயிர் ஆற்றலும் ஆனந்தமும் அதிகரிக்கின்றது.

இயற்கையின் இசை சிரிப்பு.