எட்டு வடிவ நடை பயிற்ச்சி
8 Type walking
"8" நடை பயிற்சிக்கு நம் கால் பாதத்தையே ஒரு அடியாக கொண்டு,
3 அடி ஆரத்தில் வட்டமிட்டு நடத்தல் நல்லது என்ற எனது குறிப்பிற்கு,
ஒரு முகநூல் நண்பர், "சிறிய வட்டமாக இருந்தால் தலை சுற்றுமே?
சற்று பெரியதாக ஏன் இருக்கக் கூடாது?"
எனக் கேட்ட கேள்விக்கு, என் கருத்தை பதிவாக்கியிருக்கிறேன்!
இதுவே சரியானது என வாதம் செய்யவது நோக்கமல்ல!
இது எனது புரிதல் மட்டுமே! ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்!
ஏனெனில் எனது பதிவுகள் விஞ்ஞானம் சார்ந்தது அல்ல!
அனுபவத்தை அடிப்படையாக கொண்டது!
விஞ்ஞான விளக்கம் கேட்கும் அன்பர்கள் சற்று தள்ளி நிற்கவும்!
"8" நடை எதற்கு பரிந்துரைக்கப்படுகிறது என்பதே தெரியாமல் இருக்கிறோம்!
இதைப்பற்றிய புத்தகம் எழுதியவர்களிலிருந்து,
வாய்வழியாக சொல்பவர்கள் வரை தெரிந்துக்கொள்ளாத விஷயம் ஒன்றுள்ளது!
மேம்போக்காக சொல்லப்படுகிற, கேட்கப்படுகிறஎல்லாமே
"தாத்பர்யத்தை" விட்டுவிட்டு "சம்பிரதாயத்தை"
கெட்டியாக பிடித்துக்கொள்வதின் விளைவு!
"8" நடையென்பது முதுகு தண்டு நெகிழ்வு தன்மை பெற்று
"அலைன்மென்டில்" இருப்பதற்கு!
நமது அன்றாடம் இயக்கத்தில், முதுகுதண்டு
பல முறை "டிஸ்அலைன்மென்ட்" ஆகி மீண்டும்
அலைன்மென்ட் ஆகவேண்டும்!
தவறான உணவு பழக்கம் மற்றும், "sedentary" வாழ்க்கை முறையால்
(உடல் இயக்கங்களை இயந்திரங்களிடம் ஒப்படைத்துவிட்டு,
நாகரீகம் என்ற பெயரில் சோம்பித்திரிந்து நோய்களை அழைத்துக்கொள்வது)
அன்றாடம் குனிந்து நிமிர்ந்து வளைந்து திரும்பி-இப்படி பல உடல் இயக்கங்களுக்குப்பின், முதுகுதண்டு 100% அலைன்மென்ட் நிலைக்கு வருவதில்லை!
இதைத்தான் "error" என்கிறது நவீன மருத்துவம்!
உ..ம். S1, S2, T2, T3, L5, L6 ல் error என்பது- இதற்கு
சிகிச்சை ஒன்றே வழியென பயமுறுத்துகிறது!
சிகிச்சைக்குப்பின், இப்பொழுது இருக்கும் இயக்கம்கூட இல்லாமல் போகவும்,
இயக்கம் சற்றும் இல்லாமல் படுத்த படுக்கையில் காலம் கழிக்கவும்,
வாய்ப்புள்ளது என முன்னெச்சரிக்கையாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப்பெறுகிறது!
நாமும் படித்துப்பார்க்காமலே, படித்தாலும் புரிந்துக்கொள்ளாமலே
கையெழுத்து இடுகிறோம்!
அறுவை சிகிச்சையின்போது நடக்கும் மனித தவறால் மோசமான
பின் விளைவிற்கு நம் தலையெழுத்து என நொந்துக்கொள்கிறோம்!
அனைத்து உறுப்புகளையும் மூளைக்கும்,
மூளையை அனைத்து உறுப்புகளோடும் இனைப்பது
சிறு சிறு நுண்ணிய நரம்புகள்!
இந்த நரம்புகள்தான் நமது உடல் இயக்கத்தின்
அனைத்துச் செய்திகளையும் மூளைக்குத்தெரிவிப்பதோடு,
மூளை இடும் கட்டளைகளை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு
செய்தியை சுமந்து செல்லும் முக்கிய வேலையை செய்வது!
இந்த தகவல் பரிமாற்றம் யாருக்கு செவ்வன இருக்கிறதோ
அவர்கள் ஆரோக்யத்தை அனுபவிக்கிறார்கள்!
இத்தகவல் பரிமாற்றத்தின் "telephone exchange" ஆக
பணியாற்றுவது முதுகுதண்டு!
"எர்ரரில்" (முள் எலும்புகளுக்கிடையே)
மாட்டிக்கொள்ளும் நுண்ணிய நரம்புகளால் தகவல்
பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது!
முதுகெலும்பை நேராக வைத்துக்கொள்ளும் ஆரோக்யவான்களுக்கு
நோய் என்பது இல்லை, அப்படி வந்தாலும் உடலே மருத்துவராக,
தகவல் பரிமாற்றத்தின் மூலம் சரிசெய்து கொள்கிறது(self healing)!
சில நரம்புகள் மாட்டிக்கொள்வதால்,
தகவல் போக்குவரத்து பாதிக்கப்படுவதால்,
உடல் சில பிரச்சினைகளை தீர்க்க முடிவதில்லை!
அத்தகய நரம்புகளை "ரிலீஸ்" செய்வதே "8" நடையின் நோக்கம்!
இதற்காக முதுகுதண்டிற்கு நெகிழ்வுத்தன்மையை
பழக்கப்படுத்துவதே சரியான தீர்வு!
குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு,
வாழ்க்கைமுறையிலேயே, நெகிழ்வு தன்மை கிடைத்துவிடும்!
ஆகவே "8"நடை நடக்கும்போதும் உங்கள் பாதம்,
ஒவ்வொரு அடியும் வளைந்து, வளைந்து(curve)ஆக வைக்கப்படவேண்டும்!
அப்பொழுதுதான் முதுகு தண்டின் முள் எலும்புகள்
நெகிழ்வுத்தன்மைக்கு பழக்கப்படும்!
இதற்கு வட்டம் உங்கள் பாதத்தில் 3 அடி ஆரம் உள்ள சற்று
குறுகிய வட்டமிருந்தால்தான் சாத்தியம்!
பெரிய வட்டத்தில் இது சாத்தியமில்லை, எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்காது!
இதுமட்டுமல்லாமல், முள் எலும்புகளுக்கிடையில்
"lubrication" தேவைக்கு, தாவரக்கொழுப்பு
தரும்படியான காலையுணவு, வாழைப்பழத்தையே(divine food)
உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்!
மூன்றுவேளையுமே செயற்கையுணவை சாப்பிட்டுக்கொண்டு
"8" நடை நடந்தாலும் நினைக்கும் ஆரோக்ய நிலை, எட்டாக்கனியே!
முறையாக தெரிந்துக்கொள்ளும் எனது ஒருநாள் பயிற்சி வகுப்பின்
பயனாளிகளுக்கு எந்தக்குழப்பமும், இது போன்ற வாழ்க்கைமுறை
மாற்றத்தை, வாழ்நாள் முழுதும் செய்ய எந்த தடையும்இருப்பதில்லை!
குரு இல்லாமல், எல்லாவற்றையும்,
கூகுள், யூ ட்யூப், முகநூல், வாட்ஸப், மற்றும் கேள்வி ஞானத்தால்
செய்ய நினைக்கும் அன்பர்களுக்கு "தவறான புரிதலுக்கு" நிறய வாய்ப்புள்ளது!
அதனாலேயே நல்ல விஷயங்களை நாம்
ஆரம்பித்தாலும் தொடர்ந்து செய்யமுடிவதில்லை!
யோசித்துப்பாருங்கள், சிறு வயதிலிருந்து எத்துனை
செயல்களை முயற்சித்திருக்கிறோம்!
அவற்றில் எதை தொடர்ந்து செய்கிறோம்?
ஒவ்வொருவரும் அவர்களின் புரிதலுக்கு ஏதாவது
சொல்லிக்கொண்டிருப்பார்கள், அது நல்லதாக
இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய நினைப்பது,
எதையுமே உருப்படியாக செய்ய முடியாத நிலைக்குத்தள்ளும்!
நீங்கள் கூறியதுப்போல தலை சுற்றல் வருவது,
நம் உடலின் ஆரோக்யமற்ற நிலைப்பாடு!
உடலை அதற்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளவேண்டுமே
தவிற வட்டத்தை பெரிதாக்கிக்கொள்ளக் கூடாது!
Happy healing...,!
No comments:
Post a Comment