The health benefits of
Bermuda grass- English
Arugambul-Tamil,
Karukambul-malayalam,
hareli gaas--marathi,
Druva--sanskrit,
Doob grass--hindi,
அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது.
அதன் தாவரவியல் பெயர்:
சினோடன் டாக்டிலோன்.
அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.
இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது.
சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும்.
ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.
'அருகுவே! புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்..’ என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம்.
கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.
அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் புறஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.
‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள்.
பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.
அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.
அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.
இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.
தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.
அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-
Health benefits of (harali) grass
*சிறந்த இரத்த சுத்தியாக அருகம்புல் “ஜூஸ்” விளங்குகிறது. வயிற்றுப்புண், வாயுக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை இது சீராக்குகிறது.
*உடலில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த குறைபாடுகளை இது குணப்படுத்துகிறது.
*சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.
*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500 மிலி., சாப்பிட்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.
*சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் “ஜூஸ்” மிகவும் உகந்தது. சர்க்கரையால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும்.
*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அல்லது குறைந்த இரத்தப்போக்கை இது சமன் செய்கிறது. இதேபோல் உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளைப்படுதலை அருகம்புல் “ஜூஸ்” குணப்படுத்துகிறது.
*அருகம்புல்லில் வைட்டமின் - ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
*ஆங்கில மருந்துகளை உட்கொள்வது நம்மால் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டியுள்ளது.
அருகம்புல் “ஜூஸ்” குடிப்பதால் இதுபோன்ற பக்க விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் உரிய நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பலர் கடைபிடிப்பதில்லை.
இதனால் பல்வேறு வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கிறோம்.
நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும உடல் அயற்சி மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு அருகம்புல் சிறந்த “டானிக்”.
இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட “சர்வரோக நிவாரணி” யாக திகழும் அருகம்புல்லின் மகத்துவத்தை இனியாவது நாம் உணர வேண்டும்.
அருகம்புல் சாறு தினமும் பருகி உடல்நலன் பேணுவோம்.
தினமும் டீ, காஃபி குடிப்பதைப்போலவே அருகம்புல் “ஜூஸை” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அருந்தலாம்.
அருகம்புல் “ஜூஸ்” தயாரிப்பது எப்படி?
கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி துவங்கி வீட்டின் கொல்லைப்புறத்தில் நாம் போட்டிருக்கும் தோட்டம் வரை அனைத்து இடங்களிலும் அருகம்புல்லை எளிதாகப் காணலாம். அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி, தூய்மைப்படுத்த வேண்டும். இதன் பிறகு நம் தேவைக்கேற்ப அருகம்புல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து உரல், கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இதன் பிறகு அரைத்தெடுக்கப்பட்ட அருகம்புல் பிரித்தெடுக்க வேண்டும்.
இப்போது இளம் பச்சை நிறத்துடன் கூடிய அருகம்புல் “ஜூஸ்” தயார். ஜூஸ் தயாரிக்கும் போது கொஞ்சம் துளசியை சேர்த்தால், சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது.
அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-
*சிறந்த இரத்த சுத்தியாக அருகம்புல் “ஜூஸ்” விளங்குகிறது. வயிற்றுப்புண், வாயுக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை இது சீராக்குகிறது.
*உடலில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த குறைபாடுகளை இது குணப்படுத்துகிறது.
*சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.
*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500 மிலி., சாப்பிட்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.
*சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் “ஜூஸ்” மிகவும் உகந்தது. சர்க்கரையால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும்.
*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அல்லது குறைந்த இரத்தப்போக்கை இது சமன் செய்கிறது. இதேபோல் உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளைப்படுதலை அருகம்புல் “ஜூஸ்” குணப்படுத்துகிறது.
*அருகம்புல்லில் வைட்டமின் - ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
*ஆங்கில மருந்துகளை உட்கொள்வது நம்மால் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டியுள்ளது. அருகம்புல் “ஜூஸ்” குடிப்பதால் இதுபோன்ற பக்க விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் உரிய நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பலர் கடைபிடிப்பதில்லை. இதனால் பல்வேறு வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கிறோம்.
நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும உடல் அயற்சி மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு அருகம்புல் சிறந்த “டானிக்”.
இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட “சர்வரோக நிவாரணி” யாக திகழும் அருகம்புல்லின் மகத்துவத்தை இனியாவது நாம் உணர வேண்டும்.
அருகம்புல் சாறு தினமும் பருகி உடல்நலன் பேணுவோம்.
தினமும் டீ, காஃபி குடிப்பதைப்போலவே அருகம்புல் “ஜூஸை” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அருந்தலாம்.
அருகம்புல் “ஜூஸ்” தயாரிப்பது எப்படி?
கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி துவங்கி வீட்டின் கொல்லைப்புறத்தில் நாம் போட்டிருக்கும் தோட்டம் வரை அனைத்து இடங்களிலும் அருகம்புல்லை எளிதாகப் காணலாம்.
அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி, தூய்மைப்படுத்த வேண்டும்.
இதன் பிறகு நம் தேவைக்கேற்ப அருகம்புல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து உரல், கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இதன் பிறகு அரைத்தெடுக்கப்பட்ட அருகம்புல் பிரித்தெடுக்க வேண்டும்.
இப்போது இளம் பச்சை நிறத்துடன் கூடிய அருகம்புல் “ஜூஸ்” தயார். ஜூஸ் தயாரிக்கும் போது கொஞ்சம் துளசியை சேர்த்தால், சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது.
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.
மேலும் சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட, ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் குணப்படுத்த வல்லது.
1.புற்று நோய்க்கு எதிரானது.
2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.
3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.
4.குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.
5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.
6.உற்சாகத்தைத் தரவல்லது.
7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.
8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.
9.ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
10.தீப்புண்களை குணமாக்கும்.
11.கருத்தடைக்கு உகந்தது.
12.குளிர்ச்சி தரவல்லது.
13.மேற்பூச்சு மருந்தாவது.
14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.
15.நெஞ்சுச்சளியை போக்கக் கூடியது.
16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.
17.மலத்தை இளக்கக் கூடியது.
18.கண்களுக்கு மருந்தாவது.
19.உடலுக்கு உரமாவது.
20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.
21.காயங்களை ஆற்ற வல்லது.
இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.
அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:
அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது.
சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் எனும் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க உதவுகிறது.
பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது.
மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது.
No comments:
Post a Comment