Thursday, September 29, 2016

தைராய்டு

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின் பின்னால் ஓடி, பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்களைக் கைவிட்டதன் விளைவாக, ஆரோக்கியம் இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில், மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பல நூறு நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று.

தைராய்டு சுரப்பி

கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்குக் கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பிதான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும். இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தைப் போலிருக்கும்.

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையைத் தொடங்கிவிடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளைச் சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன.

தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் மே 25-ம் தேதி உலகத் தைராய்டு நோய் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவம் மூலம் தைராய்டு நோயைக் குணப்படுத்த முடியும்.

ஹைப்போ தைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது?

அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்றுநோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, கோபம், மன அழுத்தம், தலைமுடி வறண்டு போதல், முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத் துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல், சுரப்பி வீக்கம் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இருக்கலாம்.

கருவில் இருக்கும் குழந்தையை இந்நோய் பாதிக்குமா?

மலட்டுத் தன்மை, இதய நோய்கள், கை, கால் மூட்டு வலிகள், தீரா உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும்.

ஹைபர் தைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது?

தைராய்டு சுரப்பியின் ஹார்மோன் உற்பத்தி (தைராக்சின்) அதிகரித்துக் காணப்படுவது, கிரேவீஸ் நோய் இருப்பது, அயோடின் சத்து அதிகரித்துக் காணப்படுவது, தைராய்டு சுரப்பி வீக்கம், சினைப்பை கட்டி, விதைப்பை கட்டி, வீக்கம், பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி, ரசாயனங்கள் கலந்த உணவு முறை, பழக்கவழக்க மாற்றங்கள் போன்றவற்றால் ஹைபர் தைராய்டிசம் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, இதயப் படபடப்பு, இதயத் துடிப்பு மாறுபாடு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி (ஹைனகோமேசியா), தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனநிலை மாறுபாடு, உணர்ச்சிவசப்படுதல், வயிற்றுப் பிரச்சினை, அதிக வியர்வை, தோல் வறட்சி, சுரப்பி வீக்கம், சிலருக்கு மாதவிடாய் பிரச்சினை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோயின் தீவிரத்தில் பாதிப்பு

இதய நோய்கள், எலும்பு தேய்மானம், கண் பார்வை பாதிப்பு, தோல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

தடுப்பது எப்படி?

சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால், தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.

மருந்துகள்

அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சிறுநாகப்பூ, கிராம்பு, மஞ்சள், கரிசாலை, வல்லாரை, நீலி, கொட்டை கரந்தை, செருப்படை, சீரகம், கொத்துமல்லி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஓமம், சாதிக்காய், கீழாநெல்லி, கறிவேப்பிலை, கருஞ்சீரகம், இஞ்சி பவளம், முத்து, அன்னபேதி ஆகிய மூலிகைகள், உலோக, உபரச பாடாணங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் தைராய்டு நோய் வராமல் தடுப்பதுடன், ஹார்மோன் குறைபாடுகளைச் சமன்செய்து உடலையும், உடல் உறுப்புகளையும் ஆயுள் உள்ள மட்டும் பாதுகாக்கும் காயகல்பமாகச் செயல்படுகின்றன.

எத்தனை வகைகள்?

தைராய்டு நோயில் இரண்டு வகை உள்ளன. அவை, ஹைப்போ தைராய்டிசம். ஹைபர் தைராய்டிசம்.

ஹைப்போ தைராய்டிசம் என்றால் என்ன?

தைராய்டு ஹார்மோன்கள் குறைந்த அளவு சுரப்பது ஹைப்போ தைராய்டிசம்.

ஹைபர் தைராய்டிசம் என்றால் என்ன?

தைராய்டு ஹார்மோன்கள் அதிக அளவு சுரப்பது ஹைபர் தைராய்டிசம்.

தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் எவை?

தைராய்டு சுரப்பி மூன்று வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, T3 – ட்ரை அயோடோதைரோனைன், T4 – டெட்ரா அயோடோதைரோனைன், கால்சிடோனின்.

டி.எஸ்.எச். என்றால் என்ன?

பிட்யூட்டரி சுரப்பி டி.எஸ்.எச். என்ற ஹார்மோனைச் சுரந்து, அதன்மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டித் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. டி.எஸ்.எச். என்பது தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன்.

மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி ஹார்மோன்களின் அளவு எவ்வளவு?

T3 – சீரம் ட்ரைஅயோடோதைரோநைன் ஹார்மோன் அளவு 80 – 230 ng/dl.

T4 – சீரம் தைராக்சின் ஹார்மோன் அளவு 5 – 14ng/dl.

TSH அல்லது சீரம் தைரோட்ரோபின் அளவு 0.4 – 6 miu/L.

பரிசோதனை

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் (ஃபாஸ்டிங்) மேற்கண்ட ரத்தப் பரிசோதனை, தைராய்டு ஸ்கேன் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்யலாம்.

தவிர்க்க வேண்டியவை

முட்டை கோசு, காலிஃபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், நூல்கோல், கடுகு, டீ, காபி, இனிப்புப் பலகாரங்கள், கேக், பிரெட் வகை, உலர் பழங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள், வெள்ளை சீனி, தேன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

சேர்க்க வேண்டியவை

தேங்காய், பூண்டு, வெங்காயம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, அமுக்கரா, காளான், பசலைக் கீரை, சிவப்பு அரிசி, பல்வேறு தானியங்கள், பார்லி, ஓட்ஸ், தக்காளி போன்றவற்றோடு சரிவிகித பாரம்பரிய உணவு முறை. பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்

Wednesday, September 28, 2016

பக்கவாதம் -முதலுதவி(bloodletting therapy)

பக்கவாதத்துக்கு உடனடி பலனளிக்கும் எளிமையான முதலுதவி

பக்கவாதத்துக்கு பக்காவான ஒரு முதலுதவி சீன மருத்துவத்தில் (TCM)உள்ளது.

உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு துணிதைக்கும் ஊசி மட்டுமே. இதை வைத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து அவரைக் காப்பாற்ற முடியும்.

★ முக்கிய குறிப்பு:
(இது வெறும் முதலுதவிதான். இதைச் செய்த பின்னர் நோயாளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென்று அனுப்பி வைப்பது மிக மிக முக்கியம்.)

பக்கவாதம் கண்டு கீழே விழுந்து கிடப்பவர் எங்கிருந்தாலும் அவரது உடலை அசைக்காதீர்கள், அது ஆபத்தானது ஏனென்றால் இதனால் மூளைபின் தந்துகிகள் வெடித்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடும். நீங்கள் செய்ய வேண்டிய முதலுதவி இதுதான்: துணி தைக்க பயன்படும் ஊசி ஒன்றை எடுத்து அதன் முனைகளை லேசாக நெருப்பில் காட்டுங்கள். இது அந்த ஊசிமுனையை கிருமிகள் அற்ற சுத்தம் செய்வதற்காகும்.

அதன் பின்னர் நோயாளியின் 10 கைவிரல்களின் நுனியையும் ஊசியால் குத்துங்கள். நீங்கள் இந்த அக்குபஞ்சர் பாயிண்டில்தான் குத்த வேண்டும் என்பதில்லை.

நகத்திலிருந்து சில மில்லிமீட்டர்கள் தள்ளி குத்தினால் போதும். குத்திய இடத்திலிருந்து இரத்தம் கசிந்து வெளியேறும் அளவுக்கு குத்துங்கள் ஒருவேளை இரத்தம் வெளியேறவில்லையென்றால் அவரது விரல்களை சற்று இறுக்கமாக பிடித்து அழுத்தினால் இரத்தம் வெளியேறத்துவங்கும்.

பத்து விரல்களிலிருந்தும் இரத்தம் வெளியேற துவங்கிவிட்டால் சிறிது நேரம் காத்திருந்து பாருங்கள், நோயாளி மெல்ல சகஜநிலைக்கு திரும்ப துவங்குவார்.

ஒருவேளை நோயாளியின் வாய் கோணியிருந்தால் அவரது காது மடல்களை அது இளஞ்சிவப்பாகும் வரைக்கும் ஓரளவுக்கு அழுத்தம் கொடுத்து பிசையுங்கள் ஏனெனில் அந்தப் பகுதிக்கு இரத்தம் உடனடியாக செல்ல வேண்டும்.

காது இளஞ்சிவப்பானவுடன் இரு காதுகளின் மென்மையான பகுதியிலும் துளையிட்டு அதன் வழியாக இரத்தம் கசியுமாறு செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்த சில நிமிடங்களில் கோணியிருக்கும் வாய் நேராவதை காண்பிர்கள்.

நோயாளி சகஜ நிலைக்கு திரும்பியதும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள். இம்முறை 100% பலன் தரும் சீன வைத்திய முறையாகும். இதன்மூலம் ஒரு உயிரை உங்களால் காப்பாற்ற முடியும்.

Friday, September 23, 2016

பிராண முத்திரை

நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கும் - பிராண முத்திரை பயிற்சி

மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.

செய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது.

குறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.

பலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும். உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும். உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும். இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.

ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும்.
நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கும்

Sunday, September 18, 2016

100 ஆண்டு ரகசியம்

100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபி
டியுங்கள்--
🏆 அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில்
பயன்படுத்துகிறவன்
🏆 மண்பானைச் சமையலை உண்பவன்
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய்,
அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக
ஏற்றுக்கொள்ளாதவன்
🏆 கோலா, கலர்பானங்களை அதிகம்
உபயோகிக்காதவன்
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்
🏆 கவலைப்படாத மனிதன்
🏆 நாவடக்கம் உடையவன்
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்
🏆 எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார்
எல்லாரும்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார
முடிந்தவன்
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை
செய்பவன்
🏆 தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான
தண்ணீர் பருகுபவன்
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து
உண்பவன்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன்
வாழ்பவன்
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு
இருப்பவன்
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள்
இவ்வுலகில் நோயின்றி வாழ்வான். 🌻 🙏 🙏 🙏 👌 👌 👌

அருகம் புல் / DRUVA GRASS

The health benefits of

Bermuda grass- English

Arugambul-Tamil,

Karukambul-malayalam,

hareli gaas--marathi,

Druva--sanskrit,

Doob grass--hindi,

அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது.

அதன் தாவரவியல் பெயர்:
சினோடன் டாக்டிலோன்.

அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும்.

ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது.

சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும்.

ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

'அருகுவே! புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்..’ என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம்.

கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் புறஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.

‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.

அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-
Health benefits of (harali)  grass
*சிறந்த இரத்த சுத்தியாக அருகம்புல் “ஜூஸ்” விளங்குகிறது. வயிற்றுப்புண், வாயுக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை இது சீராக்குகிறது.

*உடலில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த குறைபாடுகளை இது குணப்படுத்துகிறது.

*சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.

*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500 மிலி., சாப்பிட்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் “ஜூஸ்” மிகவும் உகந்தது. சர்க்கரையால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அல்லது குறைந்த இரத்தப்போக்கை இது சமன் செய்கிறது. இதேபோல் உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளைப்படுதலை அருகம்புல் “ஜூஸ்” குணப்படுத்துகிறது.

*அருகம்புல்லில் வைட்டமின் - ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

*ஆங்கில மருந்துகளை உட்கொள்வது நம்மால் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டியுள்ளது.

அருகம்புல் “ஜூஸ்” குடிப்பதால் இதுபோன்ற பக்க விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் உரிய நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பலர் கடைபிடிப்பதில்லை.

இதனால் பல்வேறு வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கிறோம்.

நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும உடல் அயற்சி மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு அருகம்புல் சிறந்த “டானிக்”.
இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட “சர்வரோக நிவாரணி” யாக திகழும் அருகம்புல்லின் மகத்துவத்தை இனியாவது நாம் உணர வேண்டும்.

அருகம்புல் சாறு தினமும் பருகி உடல்நலன் பேணுவோம்.

தினமும் டீ, காஃபி குடிப்பதைப்போலவே அருகம்புல் “ஜூஸை” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அருந்தலாம்.

அருகம்புல் “ஜூஸ்” தயாரிப்பது எப்படி?
கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி துவங்கி வீட்டின் கொல்லைப்புறத்தில் நாம் போட்டிருக்கும் தோட்டம் வரை அனைத்து இடங்களிலும் அருகம்புல்லை எளிதாகப் காணலாம். அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி, தூய்மைப்படுத்த வேண்டும். இதன் பிறகு நம் தேவைக்கேற்ப அருகம்புல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து உரல், கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

இதன் பிறகு அரைத்தெடுக்கப்பட்ட அருகம்புல் பிரித்தெடுக்க வேண்டும்.
இப்போது இளம் பச்சை நிறத்துடன் கூடிய அருகம்புல் “ஜூஸ்” தயார். ஜூஸ் தயாரிக்கும் போது கொஞ்சம் துளசியை சேர்த்தால், சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது.

அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-
*சிறந்த இரத்த சுத்தியாக அருகம்புல் “ஜூஸ்” விளங்குகிறது. வயிற்றுப்புண், வாயுக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை இது சீராக்குகிறது.

*உடலில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த குறைபாடுகளை இது குணப்படுத்துகிறது.

*சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.

*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500 மிலி., சாப்பிட்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் “ஜூஸ்” மிகவும் உகந்தது. சர்க்கரையால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அல்லது குறைந்த இரத்தப்போக்கை இது சமன் செய்கிறது. இதேபோல் உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளைப்படுதலை அருகம்புல் “ஜூஸ்” குணப்படுத்துகிறது.

*அருகம்புல்லில் வைட்டமின் - ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

*ஆங்கில மருந்துகளை உட்கொள்வது நம்மால் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டியுள்ளது. அருகம்புல் “ஜூஸ்” குடிப்பதால் இதுபோன்ற பக்க விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் உரிய நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பலர் கடைபிடிப்பதில்லை. இதனால் பல்வேறு வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கிறோம்.

நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும உடல் அயற்சி மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு அருகம்புல் சிறந்த “டானிக்”.
இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட “சர்வரோக நிவாரணி” யாக திகழும் அருகம்புல்லின் மகத்துவத்தை இனியாவது நாம் உணர வேண்டும்.

அருகம்புல் சாறு தினமும் பருகி உடல்நலன் பேணுவோம்.
தினமும் டீ, காஃபி குடிப்பதைப்போலவே அருகம்புல் “ஜூஸை” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அருந்தலாம்.

அருகம்புல் “ஜூஸ்” தயாரிப்பது எப்படி?
கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி துவங்கி வீட்டின் கொல்லைப்புறத்தில் நாம் போட்டிருக்கும் தோட்டம் வரை அனைத்து இடங்களிலும் அருகம்புல்லை எளிதாகப் காணலாம்.

அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி, தூய்மைப்படுத்த வேண்டும்.

இதன் பிறகு நம் தேவைக்கேற்ப அருகம்புல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து உரல், கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

இதன் பிறகு அரைத்தெடுக்கப்பட்ட அருகம்புல் பிரித்தெடுக்க வேண்டும்.

இப்போது இளம் பச்சை நிறத்துடன் கூடிய அருகம்புல் “ஜூஸ்” தயார். ஜூஸ் தயாரிக்கும் போது கொஞ்சம் துளசியை சேர்த்தால், சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது.

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.

மேலும் சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட, ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.

மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் குணப்படுத்த வல்லது.

1.புற்று நோய்க்கு எதிரானது.

2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.

3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.

4.குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.

5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.

6.உற்சாகத்தைத் தரவல்லது.

7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.

8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.

9.ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

10.தீப்புண்களை குணமாக்கும்.

11.கருத்தடைக்கு உகந்தது.

12.குளிர்ச்சி தரவல்லது.

13.மேற்பூச்சு மருந்தாவது.

14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.

15.நெஞ்சுச்சளியை போக்கக் கூடியது.

16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.

17.மலத்தை இளக்கக் கூடியது.

18.கண்களுக்கு மருந்தாவது.

19.உடலுக்கு உரமாவது.

20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.

21.காயங்களை ஆற்ற வல்லது.

இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.

அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:

அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது.

சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் எனும் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க உதவுகிறது.

பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது.
மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது.