உடல் எடை வேகமாக குறைய என்ன செய்ய வேண்டும்?
பழக்கம் #1
★எண்ணெயில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாறாக எலுமிச்சை ஜூஸ், ஸ்மூத்திகள், ஃபுரூட் சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
பழக்கம் #2
★தினமும் காலை எழுந்தது முதல் இரவில் படுக்கும் வரை குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.
பழக்கம் #3
★ஃபாஸ்ட் புட் உணவுகள், பிட்சா, பர்கர், வறுத்த உணவுகள், டின் உணவுகள், இனிப்புப் பதார்த்தங்கள், ஹாட்-டாக்ஸ், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
பழக்கம் #4 தினமும் வேக வைத்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
பழக்கம் #5
தினமும் ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன் 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்
பழக்கம் #6
தினமும் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை அளவான உணவை எடுத்து வாருங்கள். குறிப்பாக நீங்கள் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும், வயிறு முற்றிலும் நிரம்ப சாப்பிடாமல், அளவாக உட்கொள்ள வேண்டும்.
பழக்கம் #7 உணவு உண்ணும் போதும், உணவு உட்கொண்ட பின்னரும் தண்ணீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்
பழக்கம் #8
சூப், பால் போன்றவற்றை அதிகம் எடுக்க வேண்டும். அதாவது எடையைக் குறைக்க டயட் மேற்கொள்ளும் போது, அந்த டயட்டில் 25-30% நீர்ம உணவுப் பொருட்களாகவும், எஞ்சியவை திட உணவுப் பொருட்களாகவும் இருக்க வேண்டும்
பழக்கம் #9
முக்கியமாக காபி, பாட்டில் ஜூஸ், குளிர் பானங்கள், மது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
பழக்கம் #10 இரவு நேரத்தில் 8 மணிக்கு மேல் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பசியை உணர்ந்தால், அப்போது ஒரு டம்ளர் பால் அல்லது சிறிது பழக்கங்களை சாப்பிடலாம்...
No comments:
Post a Comment