Wednesday, August 31, 2016

SIX TASTE & 6-ENRGYS

ஆறு சுவைகள் தான் அறுசுவை

பழங்கால இந்திய மருத்துவங்களும்,ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு,கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது

இனிப்பு - தசையை வளர்க்கின்றது

புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது

கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது

உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து,மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

துவர்ப்புச் சுவை (Astringent)

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.

இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள்,அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்புச் சுவை (Sweet)

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு,அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour)

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும்,செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை,அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர்,நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent)

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து,வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு,மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter)

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல்,அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய்,வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt)

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி,பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

யோகா மந்திரங்கள்


ஓம் சர்வே பவந்து சுகினா

சர்வே சந்து நிராமாயா

சர்வே பத்ரானி பாஷ்யந்து

மா கசிஷித் துக்கா பாக் பாவெத்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

(அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,

அனைவரும் நோயற்று இருக்க வேண்டும்

அனைவரும் வளம் என்ன என்பதை காண வேண்டும்

யாரும் பாதிக்கப்படக்கூடாது

எல்லோரிடமும் அமைதி, அமைதி மேலும் அமைதி இருப்பதாக).

      ॐ सर्वे भवन्तु सुखिनः
        सर्वे सन्तु निरामयाः ।
          सर्वे भद्राणि पश्यन्तु
        मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
     ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

   Om Sarve Bhavantu Sukhinah
     Sarve Santu Nir-Aamayaah |
  Sarve Bhadraanni Pashyantu
Maa Kashcid-Duhkha-Bhaag-Bhavet |
Om Shaantih Shaantih Shaantih ||

                Meaning:
1: Om, May All become Happy,
2: May All be Free from Illness.
3: May All See what is Auspicious,
4: May no one Suffer.
5: Om Peace, Peace, Peace

★★★★★★★★★★★★★★★★

ஓம்… ஓம்…ஓம்…
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி

(கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி… சாந்தி…சாந்தி)

            ॐ सह नाववतु ।
              सह नौ भुनक्तु ।
          सह वीर्यं करवावहै ।
    तेजस्वि नावधीतमस्तु माविद्विषावहै ।
         ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

        Om Saha Nau-Avatu |
         Saha Nau Bhunaktu |
    Saha Viiryam Karavaavahai |
Tejasvi Nau-Adhiitam-Astu Maa                      Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, May God Protect us Both (the Teacher and the Student),
2: May God Nourish us Both,
3: May we Work Together with Energy and Vigour,
4: May our Study be Enlightening and not give rise to Hostility,
5: Om, Peace, Peace, Peace

★★★★★★★★★★★★★★★★

ஓம்… ஓம்… ஓம்… 

அஸத்தோமா ஸத்கமய 

தமஸோமா ஜ்யோதிர்கமய 

ம்ருத்யோர்மா அம்ருதங்கமய 

ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி 

(எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக). 

        ॐ असतो मा सद्गमय ।
       तमसो मा ज्योतिर्गमय ।
          मृत्योर्मा अमृतं गमय ।
    ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Asato Maa Sad-Gamaya |
Tamaso Maa Jyotir-Gamaya |
Mrtyor-Maa Amrtam Gamaya |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, (O Lord) Keep me not in the unreality (of the bondage of the Phenomenal World), but lead me towards the Reality (of the Eternal Self),
2: (O Lord) Keep me not in the Darkness (of Ignorance), but lead me towards the Light(of Spiritual Knowledge),
3: (O Lord) Keep me not in the (Fear of)Death (due to the bondage of the Mortal World), but lead me towards the immortality (gained by the Knowledge of the Immortal Self beyond Death),
4: Om, (May there be) Peace, Peace, Peace(at the the three levels - Adidaivika, Adibhautika and Adhyatmika).
★★★★★★★★★★★★★★★★

     ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

   "எங்கும் எல்லாவற்றிலும்     நன்மை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் அமைதி உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் வளம் உண்டாகட்டும்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி"

        ॐ सर्वेशां स्वस्तिर्भवतु ।
          सर्वेशां शान्तिर्भवतु ।
             सर्वेशां पुर्णंभवतु ।
          सर्वेशां मङ्गलंभवतु ।
    ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Sarveshaam Svastir-Bhavatu |
Sarveshaam Shaantir-Bhavatu |
Sarveshaam Purnnam-Bhavatu |
Sarveshaam Manggalam-Bhavatu |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: May there be Well-Being in All,
2: May there be Peace in All,
3: May there be Fulfilment in All,
4: May there be Auspiciousness in All,
5: Om Peace, Peace, Peace.

Devi Gayatri 

      காயத்ரி மந்திரம்

     "ஓம் பூர்: புவ: ஸுவ:

    தத் ஸவிதுர் வரேண்யம்

   பர்கோ தேவஸ்ய தீமஹி

  தியோ: யோந: ப்ரசோதயாத்

(காயத்திரியே கருது சாவித்திரி

ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி

நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்

மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!

                               - திருமூலர் )

              ॐ भूर्भुवः स्वः
              तत्सवितुर्वरेण्यं ।
            भर्गो देवस्य धीमहि
            धियो यो नः प्रचोदयात् ॥

      Om Bhuur-Bhuvah Svah
       Tat-Savitur-Varennyam |
      Bhargo Devasya Dhiimahi
    Dhiyo Yo Nah Pracodayaat ||

Meaning:
1: Om, (that Divine Illumination which Pervades the) Bhu Loka (Physical Plane, Consciousness of the Physical Plane),Bhuvar Loka (Antariksha or Intermediate Space, Consciousness of the Prana) andSwar Loka (Swarga, Heaven, Consciousness of the Divine Mind),
2: On that Savitur (Divine Illumination) which is the Most Adorable (Varenyam), ...
3: ... and which is of the nature of Divine Effulgence (Bhargo Devasya), I meditate,
4: May that Divine Intelligence (Dhiyah)Awaken (Pracodyat) our (Spiritual Consciousness

Tuesday, August 30, 2016

சுய-மனோவசிய பயிற்சி

எளிய சுய-மனோவசிய பயிற்சி

இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகிறார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ - எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை (sub-conscious) எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலைதான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

இதோ பயிற்சிக்கான எளிய வழிகள்:

• முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்து கொள்ளவும்.

• பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து, சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும். இதே போன்று மூன்று முறை செய்யவும்.

• பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, 'ரிலாக்ஸ்' என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

• பயிற்சியின்போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

• உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் (Elevator) மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னும் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

• இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்து விட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

• இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

• பிறகு, அந்த குறிக்கோள் முழுமை அடைவதை பல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

• இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

• பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, 'மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன்' என்று கூறிக் கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும்போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும். நம் உடலில் உள்ள பயோகிளாக் (bio-clock) அதை தானே செட் செய்து கொள்ளும். அந்த நேரம் முடிந்ததும் தானாகவே பயிற்சியிலிருந்து நீங்கள் வெளியேறுவதை உணர்வீர்கள்.

பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:

• நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்.
• இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
• என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.
• நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
• எனக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.
• நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதே போல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக் கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த எளிய பயிற்சி மூலம் மிகப் பெரிய வெற்றி அடைகிறோமோ.. இல்லையோ, விரக்தி, மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு இல்லாத ஒரு வாழ்க்கையை முழுமையாக, அதே சமயம், பிறரைக் காயப்படுத்தாத வகையில், சந்தோசமாக வாழலாம்...







Sunday, August 28, 2016

பேலியோ டயட் பற்றிய கேள்விகளுக்கு விளக்கங்கள்!

Repeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.

பாதாம் எண்ணிக்கை 100 கிராமா? 100 நம்பரா?

பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண்ணிக்கையிலும் அது கிட்டத்தட்ட 100 பாதாம்களே வரும். அதாவது ஒரு கிராம் = ஒரு பாதாம். கூடக் குறைய இருக்கலாம் தவறில்லை.

டயட்டுக்கு முன்பாக கண்டிப்பாக உடல் பரிசோதனை, ப்ளட் டெஸ்ட் செய்யவேண்டுமா?

கண்டிப்பாக செய்துகொள்வது நல்லது, அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஏற்கனவே ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தெரியவரும், அதற்கேற்ப சில பொருட்களை விலக்கியும் சேர்த்தும் டயட் எடுக்க முடியும். டயட்டிற்கு பின்பும் இந்த டெஸ்ட்களை மீண்டும் எடுப்பதன் மூலம் டயட்டால் விளைந்த நன்மைகள் உங்களுக்கு அறிவியல் பூர்வமாகவே தெரியவரும்.

கடைகளில் விற்கப்படும் பேலியோ பிரியாணி ரைஸ், பேலியோ பரோட்டா, பேலியோ ப்ரோட்டீன் பார், பேலியோ சர்க்கரை, பேலியோ சுகர்லெஸ் கரும்பு ஜூஸ், பேலியோ சப்பாத்தி, பேலியோ எண்ணெய் போன்றவற்றை வாங்கி உண்ணலாமா?  

கூடாது. பேலியோவில் உங்கள் உணவை நீங்களே சமைத்து உண்ணுவதே சிறப்பு. ரெடிமேடாகக் கிடைக்கும் உணவுகள், பேலியோ என்ற அடைமொழியுடன் கடைகளில் விற்கப்படுபவனவற்றை வாங்கி காசை வீணாக்காதீர்கள். தேவையான பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடித்தது போல சமைத்து ஆரோக்கியமாக டயட் துவங்குங்கள். எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் என்ன பொருட்கள் கலந்திருக்கிறது என்று பாருங்கள், செயற்கை நிறங்கள், செயற்கை இனிப்பு, ப்ரிசர்வேட்டிவ்கள் போன்றவைகள் இருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது உத்தமம்.

கோழி முட்டை நாட்டுக் கோழி முட்டையா? ப்ராய்லர் கோழிமுட்டையா? எது சாப்பிடுவது?

பேலியோவைப் பொறுத்தவரை தானாகவே இரை தேடி உண்ணும் மிருகங்களின் மாமிசம் மட்டுமே முதல் தேர்வு. முட்டையைப் பொறுத்தவரை நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் உன்னதம். கிடைக்காவிட்டால் ப்ராய்லர் கோழி முட்டைகளை சாப்பிடலாம். கவனம் நாட்டுக் கோழி முட்டை என்பது பண்ணைகளில் ஹைப்ரிட் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு, அந்தக் கோழிகள் இயற்கையாக உண்ணாத பொருட்களை தீவனமாகக் கொடுத்து உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும், கோழிகளும் விற்பனையாகிறது. இதை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட ப்ராய்லர்கோழியே வாங்கி உண்ணுவது உத்தமம்.

உங்களால் அருகாமை கிராமங்களில் சுதந்திரமாக வளர்க்கப்படும் கோழிகளை, முட்டைகளை வாங்க முடியுமென்றால் உங்கள் உடல் நலத்திற்கென வாரம் ஒரு நாள் பயணம் செய்து அப்படி வளர்ப்பவர்களிடம் வாங்கிப் பயனடையலாம். உங்கள் முயற்சியையும், நேரத்தையும் பொறுத்தது அது. இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாதவர்கள், ப்ராய்லர் வாங்கி டயட்டை முன்னெடுங்கள்.

டேட்ஸ் சாப்பிடலாமா? ஓட்ஸ் சாப்பிடலாமா? பழங்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?வேர்க்கடலை, பருப்பு ஏன் தவிர்க்கவேண்டும்? பீன்ஸ் ஏன் சாப்பிடக்கூடாது? ஏன் பழங்களை ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது?

டேட்ஸ் என்பது ஒரு இனிப்பு உணவுதான், அதைச் சாப்பிட்டு இரும்புச் சத்து உடலில் சேரவேண்டுமானால் ஒவ்வொரு வேளையும் 1.5கிலோ அளவுக்குச் சாப்பிடவேண்டும், அதில் சேரும் இரும்புச் சத்தைவிட உங்களின் உடலில் சேரும் சர்க்கரை அளவுகள் அதிகம்.

பழங்களிலும் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, டயபடிஸ் இருப்பவர்கள் பழம் சாப்பிட்டால் உடனே சர்க்கரை அளவுகள் ரத்தத்தில் ஏறும். போலவே உடல் எடை குறைக்க டயட் எடுப்பவர்கள் முதல் 30  
நாட்கள் பழங்கள் தவிர்ப்பது நல்லது, இது இன்சுலினை ஏற்றும், உடல் எடை கூடும், ஏன் எடை குறையவில்லை என்று குழப்பமே மிஞ்சும்.

பருப்பு, லெகூம் வகைகளில் வரும் பீன்ஸ் வகைகளும் இயற்கையாகவே பைட்டிக் அமிலம் (Pytic Acid) என்ற தற்காப்பு விஷயத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த இயற்கை தற்காப்பு விஷயம் பருப்பு, பீன்ஸ் வகைகளை நாம் சமைத்து உண்ணும்போதும் அழியாமல் உடலில் சேர்ந்து பல உபாதைகளையும், அதனுடன் நாம் உண்ணும் பிற உணவுகளின் சத்துக்களை நம் உடலில் சேரவிடாமலும் செய்கின்றன. அதனாலேயே பாலியோவில் அவற்றுக்குத் தடை.

பேலியோவில் குதித்துவிட்டேன், நான் எப்படி சாப்பிடவேண்டும், கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டில் இருப்பவைகளுடன் கூடவே கோதுமை தோசை, தேன் தினைமாவு, ஹெர்பாலைப் பவுடர், கொள்ளு ரசம், ஓட்ஸ் அல்வா, அப்பளம், எண்ணெயில் நன்றாகப் பொரித்த சிக்கன், வெல்லம் போட்ட கடலைமிட்டாய், இன்னபிறவற்றையும் கூட சேர்த்து சாப்பிடலாமா?

கூடாது, கொடுக்கப்பட்ட டயட் சார்ட்டை மட்டும் முதல் 30 நாட்கள் கடுமையாகக் கடைபிடிக்கவும். மேலே சொன்ன உணவுகள் யாவும் பேலியோவில் விலக்கப்பட்டவை.

நீங்கள் கொடுத்த டயட் சார்ட்டினை நானே சிறிது மாற்றி, காலையில் ஒரு காபியுடன் 5 பட்டர் பிஸ்கெட் (பட்டர் பாதாம்தானே?) அல்லது மேரி பிஸ்கெட், 100 பாதாமுக்குப் பதில் 15 பாதாம், இரண்டு இட்லி, மஞ்சள் கரு இல்லாத முட்டை, இதயத்துக்கு நலமளிக்கும் சன்ப்ளவர் ஆயிலில் செய்த மெதுவடை 1, மதியம் 1 ப்ளேட் சோறு, பீன்ஸ் பொரியல், அவரைக்காய் கூட்டு, நிறைய சன்ப்ளவர் எண்ணெய் விட்டு வதக்கிய உருளைக்கிழங்கு பொரியல், இரவு சப்பாத்தி 4, பனீர் டிக்கா, சிக்கன் 65 போன்றவைகளை சாப்பிடுகிறேன். குறைவாகச் சாப்பிட்டால் விரைவில் எடை குறையும் என்பதற்காக நானே சொந்தமாக ஜிந்திச்சி இப்படி டயட் சார்ட் எடுத்துக்கொண்டேன், இது சரியான டயட்தானா?

 வேலை மெனெக்கெட்டு டயட் சார்ட் கொடுப்பது அதை அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மேலே உள்ள உணவுகளில் சூரியகாந்தி எண்ணெய், பொரித்த உணவுகள், பிஸ்கெட், சோறு, சப்பாத்தி போன்றவைகளால் உங்கள் எடை கூடும், எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 போன்றவைகளால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவுகள் கூடும் எனவே தயவுசெய்து உங்கள் ஜிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கொடுத்துள்ள டயட் சார்ட்டின்படி வயிறு நிரம்ப சாப்பிடுங்கள். குறைவாகச் சாப்பிடுவது, கலோரி கணக்குகள் இங்கே உதவாது. பசியுடன் இருக்கவைக்கும் எந்த டயட்டும் நல்ல டயட் இல்லை.

என் எடை 105 கிலோ, எனக்கு சர்க்கரை குறைபாடு, பிபி, தைராய்ட் எல்லாம் உண்டு, நான் பேலியோவை கடுமையாக கடைபிடித்துவிட்டு என் எடையை 75 கிலோவுக்குக் குறைத்துவிட்டு, சர்க்கரை, பிபி எல்லாம் நார்மலாக்கிவிட்டு பிறகு சாதாரணமாக நான் சாப்பிடலாமா? 

தாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் அப்படிச் சாப்பிட ஆரம்பித்த உடன் உங்கள் எடை ஏறும், சர்க்கரை, பிபி அளவுகள் கூடும், பழைய படி எடையில் செஞ்சுரி அடித்து மேல் மூச்சு வாங்க மீண்டும் பேலியோவுக்குத்தான் ஓடிவருவீர்கள்.

அப்படி என்றால் காலம் பூராவும் நான் பேலியோவைத்தான் உண்ணவேண்டுமா?

கிட்டத்தட்ட ஆமாம். காலம்பூரவும் அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை, இனிப்புகள், குப்பை உணவுகள் மானாவாரியாக உள்ளே தள்ளி உடல் நிலை கெட்டபோது வராத இந்தக் கேள்வி ஏன் பேலியோவுக்கு மட்டும் வருகிறது என்பதை யோசியுங்கள். உங்களின் சாதாரண உணவுகள் உங்கள் உடலுக்கு உபாதைகள் தருகின்றன, பேலியோ உங்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகிறது என்றால் எதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உண்பீர்கள் என்பதற்கான விடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேன்டும். 

ஏன் காபி குடிக்கக்கூடாது? என்னால் காபி குடிக்கமுடியவில்லை என்றால் நான் இறந்தேவிடுவேன்.

இல்லை நீங்கள் இறக்கமாட்டீர்கள். காபி என்பது ஒரு போதைதான், இருதயத்துக்கு பலமான அதிர்ச்சி கொடுக்கும் இந்தப் பானம்தான் உங்களின் ரத்த அழுத்தத்திற்கான முழு முதல் காரணி. நீங்கள் 50 வருடம் தினம் 10 லோட்டா காபி குடிப்பவர்களாகக் கூட இருங்கள், 1 வாரம் காபி குடிக்காமல் இருந்துவிட்டால் அதன்பிறகு இப்படி ஒரு பானத்திற்காகவா உயிர்விடத் துணிந்தோம் என்று நீங்களே உங்களைப் பார்த்து கேட்கும் நிலை வரும். ஆம், காபி குடிப்பதை விட்டால் முதல் 3-4 நாட்களுக்கு தலை வலிக்கும், நன்றாக நெற்றியில் சுக்கை பாலில் அரைத்து பற்றுப் போட்டுவிட்டு கம்மென்று படுத்து விடுங்கள், 5-ம் நாள் காபி எனும் போதை உங்கள் வாழ்விலிருந்து ஒழிந்துவிடும். இது நரசுஸ் மீது ஆணை. கேவலம் ஒரு காபியைக் கூட உணவிலிருந்து ஒழிக்கமுடியாவிட்டால் நம்மால் எந்த டயட்டையும் எடுத்து உடல் நலம் பேண முடியாது.

வேறு வழியே இல்லை என்றால்..

காபிக்கு மாற்றாக புல்லட் ப்ரூப் காபி, பட்டர் டீ, க்ரீன் டீ போன்றவைகள் எடுக்கலாம். 

புல்லட் ப்ரூப் காபி செய்முறை -இங்கே.

பட்டர் டீ செய்முறை - இங்கே

பேலியோ டயட் ஆரம்பித்த உடன் எனக்கு மலச்சிக்கல் வருகிறது. வயிறு வலிக்கிறது, பேதி ஆகிறது, தலை வலிக்கிறது, சோர்வாக உணர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் உடல் கார்போஹைட்ரேட் மூலம் சக்தி கிடைப்பதிலிருந்து கொழுப்பு மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் வழி மாறுவதற்கான அறிகுறிகள்தான் மேலுள்ளவை. பெரும்பாலும் ஒரு வாரத்திறகுள் இவை சரியாகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். டயட் சார்ட்படி டயட் எடுத்தாம் மட்டுமே இது பொருந்தும், உங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம். தண்ணீர் சரியான அளவு குடிக்காமல் விட்டாலும் மேலுள்ள பிரச்சனைகள் வரலாம்.

மலச்சிக்கல் நீங்க பேலியோ காய்கறிகள், தினம் ஒரு கீரை, காலை எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர், போன்றவை உதவும். அதிக காய்கறிகள், சரியான நீர் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் தரும். 

பேலியோ எடுத்தது முதல் தாகம் அதிகமாக இருக்கிறது, வாய் உலர்ந்து போகிறது, கண் எரிச்சலாக இருக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், கொழுப்பு சார்ந்து தானியம் தவிர்த்து டயட் எடுக்கும்பொழுது உடலில் முதலில் ஏற்படும் எடை இழப்பு என்பது தானியம் சாப்பிட்டதால் உடல் தேக்கி வைத்திருக்கும் நீர் எடையே. இந்த உடல் நீர் வற்றும்பொழுது தாகம் எடுக்கும், எனவே பேலியோவில் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். 3-4லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். வாய் உலர்ந்து போகுதல், கண் எரிச்சல் போன்றவை உடலில் கொழுப்பு எரிவதாலும் நிகழலாம் அல்லது நீங்கள் அளவு குறைவாக சாப்பிடுவதாலும் நிகழலாம்.   

பேலியோவில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு டயட் இல்லையா? நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன், எனக்கு பேலியோ டயட் கடைபிடிக்க முடியுமா?

முடியும். தெளிவாக இந்தத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான டயட்டில் மட்டுமே கவனம் செலுத்தவும். எல்லாவகை உணவுப் பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் டயட் சார்ட் தேவைப்படுவதால், விருப்பு, வெறுப்பு, மதம், கடவுள், ஜாதி இன்னபிறவற்றை உடல்நலம் காக்கும் உணவுக்குறிப்புகளுடன் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.

மேலே தெளிவாக டயட் சார்ட் கொடுக்கப்பட்டும் எனக்கு எழும் சந்தேகங்கள் பின்வருமாறு:
டேட்ஸ், ஓட்ஸ், சிறு தானியங்கள், வேர்க்கடலை, முந்திரி, தேன், வெல்லம், கருப்பட்டி, ஸ்டீவியா, சுகர் ப்ரீ மாத்திரைகள், காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ், வெந்தய தோசை, மசாலாதோசை, கேஎப்சி/மெக்டொனால்ட் சிக்கன், போன்ற நீங்கள் டயட் சார்ட்டில் குறிப்பிடாத உணவுகளைச் சாப்பிடலாமா?

கூடாது.

தெள்ளத் தெளிவாக இந்த பேலியோவின் அடிப்படையிலான டயட் சார்ட் என்பது ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு சார்ந்த அடிப்படையைக் கொண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. டயட் சார்ட்டில் குறிப்பிட்டதைவிட குறைவாகச் சாப்பிடுவது, மற்ற உணவுகளைக் கலந்து சாப்பிடுவது. ஹெர்பாலைப், கொள்ளு பவுடர், மூலிகைகள், சிட்டுக்குருவி லேகியம் போன்றவைகளை சேர்த்து உண்பது என்பது கூடாது.

பேலியோ டயட் எடுக்கும்பொழூது சரக்கடிக்கலாமா? 
பேலியோ டயட் என்று இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாராயமும் சிகரெட்டும் கூடவே கூடாது. ஆண்டுக்கணக்கில் சிகரெட்டும், சரக்குமாக இருந்த நண்பர்கள் பேலியோ டயட் எடுத்தபிறகு அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து இருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு இந்தப் பழக்கங்களிலிருந்து வெளியேற விருப்பம் இருந்தால் இந்த டயட் அதற்கு உதவும். சரக்கடிக்க பேலியோ டயட்டை சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தினால் நிச்சயம் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

கூகுள் தளத்தில் பேலியோ என்று தேடினால் வரும் ரிசல்டுகளில் சொல்லப்படுபம் விஷயங்களுக்கும், இந்தக் குழுவில் சொல்லப்படும் விஷயங்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறதே?

ஆம். ஆரோக்கியம் நல்வாழ்வுக் குழுவில் நமது மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை பேலியோ டயட்டில் செய்திருக்கிறோம். உலகின் முழு முதல் முட்டை கூட இல்லாத சைவ பேலியோ டயட்டும் இந்தக் குழுவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் மூலம் பெறப்படும் கொழுப்புணவுதான் அதிக நன்மைகளைத் தரும் என்றாலும், பிறப்பிலிருந்தே சைவ உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு பல காரணிகளால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காக உடலுத் தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த சைவ டயட் தயாரிக்கப் பட்டுள்ளது.

சைவ பேலியோ, அசைவ பேலியோ எது சிறந்தது?

பேலியோ என்றாலே அசைவம்தான், மனிதன் நெருப்பே கண்டுபிடிக்காத காலத்தில் சைவத்தை விட அசைவமே அவனுக்குத் தெரிந்த பிரதான உணவாக இருந்தது. ஆக அசைவ பேலியோவே சிறந்தது, உடல் எடை குறைப்புக்கு மட்டும் என்றால் சைவ பேலியோவும், நடை பயிற்சியுமே போதுமானது. உடல் பிரச்சனைகளோடு டயட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடத் தயார் என்றால் அவர்களுக்கு பலனலளிக்கக் கூடிய டயட் பேலியோவில் கிடைக்கும். நீங்கள் பால் குடிப்பீர்கள் என்றால் முட்டையும் அதைப் போலத்தான் என்று நினைத்துக்கொள்ளவும். முடியவே முடியாத மனத்தடை என்றால் வேண்டியதில்லை, மனத்தடையோடு எந்த புதிய முயற்சியும் நன்மை தராது. 

பேலியோ பற்றி தமிழில் ஏதேனும் புத்தகம் வந்துள்ளதா?

நமது குழுமம் சார்பிலேயே நியாண்டர் செல்வன் அவர்களின் முக்கிய பதிவுகள் தொகுக்கப்பட்டு பிடிஎஃப் வடிவில் இலவச புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. குழுமத்தில் இருப்பவர்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://paleogod.blogspot.in/2015/08/munnor-unavu-pdf-first-tamil-paleo-guide.html 

என்னால் தடாலடியாக பேலியோவுக்கு மாறமுடியாது, ஆனாலும் நான் பேலியோவுக்கு மாற விரும்புகிறேன், சிறிது சிறிதாக பேலியோவுக்கு மாற வழிமுறை உள்ளதா?

உள்ளது. திரு.கோகுல் குமரன் அவர்களின் படிப்படியாக பேலியோ உணவுமுறைக்கு மாறும் இந்த கையேடு உங்களுக்கு உதவும்.

https://www.facebook.com/groups/tamilhealth/262831150574038/ 

பேலியோ டயட் பற்றிய சுலபமான புரிதலுக்காக டிப்ஸ் எதாவது? 

உணவு என்றாலே டிப்ஸ் இல்லாமலா? கோகுல் குமரன் அவர்கள் தொகுத்த பேலியோ டிப்ஸ் உங்களுக்காக.

இங்கே

http://paleogod.blogspot.in/2015/08/paleo-diet-tips.html

http://paleogod.blogspot.in/2015/08/paleo-diet-for-dummies.html

தைராய்டு பற்றி அறிய விரும்புகிறேன் விவரங்கள் தரவும்.

http://paleogod.blogspot.in/2015/08/thyroid-diet.html 

http://paleogod.blogspot.in/2015/08/cholesterol-gout-hyperuricemia.html

HbA1C டெஸ்ட் என்றால் என்ன? டயபடிஸ் பரிசோதனைக்கு ஏன் இந்த டெஸ்ட் எடுக்கவேண்டும்?

http://paleogod.blogspot.in/2015/08/what-is-hba1c-test-hba1c-by-muthuraman.html

நான் 30 நாட்கள் பேலியோ முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன், எனக்கு எவ்வளவு செலவாகும்? நான் என்னென்ன வாங்கவேண்டும்?

இணைப்பைப் பார்க்கவும் 30 நாட்கள் பேலியோ சாலஞ்ச்.

http://paleogod.blogspot.in/2015/08/30-days-paleo-challenge-30.html

கெஃபிர் என்றால் என்ன? What is Kefir?

http://paleogod.blogspot.in/2015/09/kefir-probiotc-kefir.html 

பேலியோவில் என் எடை திடீரென்று குறையாமல் அப்படியே நின்றுவிட்டது, காரணம் என்ன?

http://paleogod.blogspot.in/2015/09/weightloss-stages-in-paleo.html 

கர்பமாக இருக்கும் சமயம் பேலியோ டயட் எடுக்கலாமா? 

http://paleogod.blogspot.in/2015/10/pregnency-paleo-diet.html

(புதிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ந்து இந்தத் தளத்தில் அப்டேட் செய்யப்படும்..)