'சுஜோக்' தெரபி
Sujok therapy
இது ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும்.
கொரிய மொழியில், 'சு' என்பது கைகளையும் 'ஜோக்' என்பது பாதங்களையும் குறிக்கும்.
இரண்டும் இணைந்த வார்த்தை
'சுஜோக்'. நமது உடலின் 'ரிமோட்' கன்ட்ரோலாக கைகளையும் பாதங்களையும் கருதலாம்.
உடலின் செயல்பாடுகள் இந்த இரண்டு உறுப்புகளிலும் பிரதிபலிக்கிறது. எனவே, உடலின் எந்த பாகத்தில் வலி அல்லது நோய் ஏற்பட்டாலும் அதை புரிந்து கொண்டு அது தொடர்புடைய புள்ளி, நமது கைகள் அல்லது பாதங்களில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து 'அழுத்தம்' ( பிரஷர் ) தந்து அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு 'சுஜோக்' என்று பெயர்.
'அழுத்தம்' கொடுப்பது, வண்ணம் தீட்டிக் கொள்வது ( கலர் தெரபி ), பச்சை பயறு, மிளகு, வெந்தயம் போன்ற விதைகள் வைத்து அழுத்துவது ( சீட் தெரபி ), பிரத்யேக காந்தம் வைத்து டேப் மூலம் சுற்றுவது ( மேக்னட் தெரபி ) போன்றவை 'சு- ஜோக்' முறை வைத்தியத்தில் இடம்பெறுகிறது.
தென்கொரியாவில் தோன்றிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறையுள் மருந்துகளே கிடையாது.
பேராசிரியர் 'பார்க் ஜெ வூ '
என்பவரால் உலகுக்கு உணர்த்தப்பட்ட 'சு- ஜோக்' வைத்திய முறையில், எல்லாவிதமான வலிகளையும் விரட்ட முடியும்.
உடலில் 14 விதமான சக்தி ஓட்டங்கள் உள்ளன. கொரியா, சீனா, ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட இந்த மருந்தில்லா மருத்துவ முறை 1987ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் பிரபலமாகிவருகிறது.
'சு-ஜோக்' மருத்துவர்கள் உலக அளவில் அமைப்பு வைத்துள்ளனர்.
இதன் மூலம் 'சு-ஜோக்' மருத்துவத்தின் நன்மைகளை மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment