Saturday, February 20, 2016

சிரித்து மகிழ்வோம்!

உயிர்களின் ஒரே மொழி – சிரிப்பு !

”எள்ளல் இளமை பேதைமை மடன் என்று சிரிப்பை வகைப்படுத்துவர் தொல்காப்பியர்.

நம்ம தாத்தா வள்ளுவர் கூட“துன்பம் வரும் போதும் சிரிங்க“ன்னு சொல்லியிருக்கார்.

வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப்போகும் என்று நம் முன்னோர் சொல்வார்கள்.

சிரிப்பின் தோள்களில் வெற்றிஅமர்ந்திருக்கிறது.

அழுகையின் தோளில் என்றும்தோல்வியேகுடிகொண்டிருக்கிறது.

உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவனை நீயும் சிரிக்க வை!

உன்னைப் பார்த்துச் சிரிப்பவனை நீ சிந்திக்கவை!

என்றெல்லாம் பொன்மொழிகள் வழக்கில் உள்ளன.

அசட்டுச்சிரிப்பு

ஆணவச்சிரிப்பு

ஏளனச்சிரிப்பு

சாகசச்சிரிப்பு

நையாண்டிச் சிரிப்பு

புன்சிரிப்பு (புன்னகை)

என விக்கிப்பீடியா சிரிப்பை வகைப்பாடு செய்கிறது.

இன்றைய சூழலில் சிரிப்பு மருத்துவம் அதிக வழக்கில் வந்துவிட்டது.

ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால், 

பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். "தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சிரிப்பு மருத்துவர்கள்.

தெனாலிராமன் கதை, முல்லா கதை, மரியாதைராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை, பஞ்சதந்திரக்கதை, பரமார்த்தகுரு கதை என நம் இலக்கியக் கதை மரபுகள் தொடங்கி இலக்கியப் பரப்பில் நிறைய சிரிப்பு மருத்துவர்களைக் காணமுடிகிறது.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் அந்தக் காலத்து நகைச்சுவை நடிகர்கள் தொடங்கி இன்றைய நகைச்சுவை நடிகர்கள் வரை நிறைய சிரிப்பு மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்..

இன்றைய சூழலில் சிரிப்பு.

ஒருவரின் சிரிப்பை வைத்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று புரிந்துகொள்ளமுடியாது.

ஏன் என்றால் போலிச்சிரிப்புகளே பலரும் சிரிக்கிறார்கள்.

சிரிப்பின் இலக்கணமே நிறைய மாறிவிட்டது.

திரையுலகம் அப்படியொரு மூளைச் சலவையை நமக்குச் செய்துவருகிறது.

ஒருவரின் நிறம், உயரம், அழகு, உடல் குறைபாடு, மனக்குறைபாடுபோன்றவற்றைச் சொல்லி சிரிப்பை வரவழைப்பது அதிக வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.

இதிலும் சில வகைப்பாடுகள் உண்டு..

1.

   தன்னைத் துன்புறுத்திக் கொண்டு இன்னொருவரைச் சிரிக்கச் செய்வது.

2.இன்னொருவரைத் துன்புறுத்திப் பலரைச் சிரிக்கச் செய்வது.

3.இன்னொருவர் போல கேலி செய்து நடித்துக் காட்டுவது.

இதற்குப் பெயரா சிரிப்பு..??

சிரிப்பு ஒருவரைத் திருந்தச் செய்யலாம்.. வருந்தச் செய்யலாமா??

ஒருவரிடமிருந்து நயமாக, நலமாக, இயல்பாக சிரிப்பை வரவழைக்க ஆயிரம் வழிகள் உண்டு..

★சிரிப்பதனால் கிடைக்கும் பயன்கள்!
பொதுவாக ‘வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்’ என்பர். ஆனால் சிரித்தால் மட்டுமல்ல, மனம் விட்டு அழுதால் கூட நோய்கள் ஏதும் அருகில் அணுகாது.
சொல்லப்போனால், உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே மனம் தான்.

மனதில் ஏற்படும் கோளாறுகளே உடல்நலக் கோளாறுகளாக பிரதிபலிக்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் பிரச்சனைகள், சிரமங்கள் நிச்சயம் இருக்கும்.

ஆனால் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் உணர்சிகளை அடக்குபவரே இங்கு ஏராளம்.

சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, சிலருக்கு அழுகை பீறிட்டு விடும். ஆனால் அழுகையை பலவீனமாக நினைத்து, அதனை அடக்கி கொள்வோர் அநேகம்.

அவ்வாறு அழுகை வரும் போது, அதை அடக்கிக் கொள்வதாலே நிறைய நோய்கள் உடலை பற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான மக்கள் கண்ணீரை உணர்ச்சி பெருக்கெடுத்து வரும் பலவீனத்தால் ஏற்படுவது என்றே பார்க்கின்றனர். ஆனால் கண்ணீர் என்பது உடல் மற்றும் மனதில் உள்ள அழுத்தத்தை போக்குவது என்று பலரும் உணருவதில்லை.

அழுகை என்பது நாம் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை, அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெறுப்பாக இருந்தாலும் சரி, வெளிபடுத்துவதற்கு உதவுகிறது. இது மட்டுமின்றி அழுவதால் நிறைய ஆரோக்கிய நலன்களும் உள்ளன. அழுவதை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். மேலும் கண்ணீரிடையே பல வகையான இரசாயன வேறுபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கண்ணீர்களில் உள்ள வகைகள் மற்றும் அவ்வாறு அழுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களைப் பற்றி இங்கே காண்போம்.

உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர்

இந்த வகையான மக்கள் உணர்ச்சி வயப்படும் போதெல்லாம், கண்ணீர் சிந்துவர். இது சோகம், அழுத்தம், விரக்தி மற்றும் ஆனந்த கண்ணீராக இருக்கலாம்.

அடிப்படை சார்ந்த கண்ணீர்

இவ்வகை கண்ணீர், பைலாக்ரைமல் (bylachrymal) என்னும் சுரப்பிகள் வெளியிடும் திரவம் ஆகும். இது பாக்டீரியா தாக்குதல்களில் இருந்து, விழிகளை பாதுகாக்க அத்தியாவசியமானதாகும்.

தற்காத்துக் கொள்ள வெளியாகும் கண்ணீர் இது தூசிகள் கண்களில் படும்போது, அதிலிருந்து கண்கள் பாதுகாத்து கொள்ள வெளியிடும். இவ்வகை கண்ணீர்கள் கண்களில் அன்னிச்சையான செயலாகும்.

கண் பார்வை மேம்படும்

கண்ணீர் பார்வையை மேம்படுத்த உதவும். கண்களில் உள்ள விழி திரைகள் மற்றும் சவ்வுகள் நீரற்று காய்ந்து போனால், பார்வையில் தடுமாற்றம் ஏற்படும். அந்த நிலையில் அழுதால், கண்ணீரானது விழித்திரை மற்றும் சவ்வுகளை ஈரப்படுத்தி பார்வையை சரிசெய்யும்.

கண்களை சுத்தம் செய்யும்

மற்ற பகுதிகளில் இருப்பதை போல விழிகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் கண்ணீரில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்க்கும் பண்புகள் (Anti Bacterial Activity) உள்ளன. வெறும் ஐந்து நிமிடங்களில் 90 முதல் 95 சதவீதம் வரை, கண்களில் இருக்க கூடிய பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய திரவமான லைசோஜோம் .

மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம்

மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருக்கும் போது, உடலில் உள்ள இரசாயன நிலைகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அதனை சரிசெய்ய கண்ணீர் உதவுகிறது. ஒருவர் கவலையான சூழ்நிலையில் இருக்கும் பொழுது, மனம் விட்டு அழுதால் மன இறுக்கம் மற்றும் அழுத்தம் இருக்காது என்று கூறப்படுகிறது. உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் அட்ரினோகார்ட்டிகாட்ரோபிக் (Adrenocorticotropic) மற்றும் லூசின் (Leucine) என்ற உடலில் இருந்து மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்களை வெளிபடுத்துகின்றன .

நச்சுப் பொருட்களை போக்கும்

சாதாரணமாக வெளிப்படும் கண்ணீரில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதாகவும், உணர்ச்சி பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றன. மேலும் உணர்ச்சியால் உடலில் ஏற்படும் அழுத்தங்களினால் உருவாகும் நச்சுகள் கூட, கண்ணீர் வழியாக வெளியேற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியம் அளிக்கிறது

உணர்ச்சி பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் 24 சதவீதம் வரை அல்புமின் (albumin) புரதம் உள்ளது. இது உடலின் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்துகிறது. அழுகை உடலில் மன அழுத்தத்தால் ஏற்படக் கூடிய நோய்களான இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது.

ஆறுதலாக உணர வைக்கும்

வாழ்வில் நிறைய பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை சந்தித்தாலும், அழுகை சிறந்த மன ஆறுதலை தரும். மேலும் கண்ணீர் விட்டு அழுத பின் மூளை, இதயம் சரியான நிலையில் செயல்பட ஆரம்பித்துவிடும். எனவே தான் அழுதப் பின்னர், உடல் அளவில் உடல் அளவில் மிகவும் ஆறுதலாக உணர முடியும். ஆகவே அழ நினைத்தால் உடனே அழுது விட வேண்டும். அப்போது பலவீனம் என்று நினைத்து அதனை மனதிலேயே அடக்கி வைத்து கொண்டால், உடலுக்கும் மனதிற்கும் கேடு விளையும். அதுமட்டுமின்றி, அழுவதால் இவ்வளவு நன்மை என்று தெரிந்த பின்னும் அழுவதற்கு யோசிக்க கூடாது.

அன்பு நண்பர்களே.. 

இனிமேல் நாமும் ஒருவரைப் பார்த்துச் சிரிக்கும் முன்னரும், 

ஒருவரைச் சிரிக்கவைக்கும்போதும் இதனைக் கொஞ்சம் சிந்திப்போமே..

No comments:

Post a Comment