Monday, October 9, 2017

இன்று கண்களில் உள்ள ஒன்பது மையங்கள் பற்றி அரந்து கொள்வோம்

<3 இதுவரை நாம் உடலில் உள்ள ஒன்பது மையங்கள் பற்றியும்,

அதன் இயக்கம்,

அதன் மீது தியானம் செய்யும் முறையும் நாம் அறிந்து இருக்கிறோம்

இன்று கண்களில் உள்ள ஒன்பது மையங்கள் பற்றி அரந்து கொள்வோம்

1. கண் என்பது  - மூலாதாரம்.

2. அதனின் வெளிப்புற சிவப்பு நிற சதைப் பகுதி – சுவாதிஷ்ட்டானம்.

3. வெள்ளை நிற விழிப் பகுதி – மணிபூரகம்.

4. கருவிழியின் வெளிப்புறம் (outer layer) – அனாகதம்.

5. கருவிழி முழுதும் – விசுக்தி.

6. கருவிழியின் மையத்தில் இருக்கும் பாப்பா (pupil) – ஆக்கினை.

7. பாப்பாவின் நடு பாகம் (ஊசி முனை வாசல்)

(துவார பாலகர்) – துவாரம்  -  துரியம்.  துவாரம் + பாலகம் = துவார பாலகர். 

துவாரம் என்றால் ஊசி முனை அளவு ஓட்டை,

பாலகம் என்றால் என்றும் இளமையாக இருப்பது.

8. பாப்பாவின் ஆழ் நிலை – சக்திகளம் – (பர துரியம்)

9. மையமில்லா  நிலை – சிவகளம் – (சிவ துரியம்)

இதுபோல் ஒவ்வொரு சிற்றறைகளிலும்

ஒன்பது மையங்கள் உண்டு. 

கருவிழியின் பாப்பாவிற்கு முதுமை வருவதில்லை. 

அது என்றும் பால்யமாக இருப்பதால்

இதற்கு “பாலாமணி” என்ற பெயரும் உண்டு. 

இந்த பாலமணியைத் தான் பாலாம்பிகை என்றும்,

வாலைக் குமரி என்றும்,

கும்பி என்றும்,

குமரி அம்மன் என்றும் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது என்றும் குழந்தை வடிவத்தில் நினைப்போருக்கு உற்ற துணையாக உடனிருந்து காத்து,

வழிகாட்டும் சக்தியாகவும், தேவதையாகவும் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

இதனை சீன முறையில் வெகு புனிதமாக கொண்டாடுகிறார்கள் <3

<3 கருவிழியின் மையத்தின் மாண்பில் : உள் முக பயணம் <3

No comments:

Post a Comment