யாரும் வாசித்துப்பார்க்கப் போவதில்லை. ( Piles )⚡
மலச்சிக்கல் நீண்ட நாட்களாக நீடித்து இருக்க அதனால், ஆசனவாயினைச் சுற்றி செல்லக் கூடிய கார் இரத்த நாளங்களின் வலைபின்னல்களில் (Venous plexus ) உண்டாகும் வீக்கம் கட்டியாக மாறிக் காணப்படும் நிலையே மூல நோய் எனப்படும்.
🍁 இந்த வாரம் இதனைப் பற்றி காண்போம்.
மூல நோய் வருவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மலச்சிக்கல்.
மலச்சிக்கலையும், மூலத்தையும் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நம் உடலில் மலக்குடலின் அமைப்பையும், அதில் என்ன வேலை நடைபெறுகிறது, மலம் எவ்வாறு இயற்கையாக கழிக்கப்படுகிறது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதும் அவசியம்.
🌲 உடற்கூறியல் :
( வயிற்றுப் புண் தலைப்பில் இரைப்பை வரை முன்பே பார்த்து விட்டதால் இப்போது சிறு குடலில் இருந்து பார்போம்)
💧சிறுகுடல் :
(small intestine)
இது சுமார் 6 மீட்டர் நீளமும், 23 செ.மீ விட்டமும் உள்ள ஒரு குழாய் ஆகும்.
இது வயிற்றின் தொப்புள் பகுதியில், பெருங்குடலால் சூழப்பட்டுள்ளது.
பெரிடோனிய மடிப்பின் மூலம் இது வயிற்றின் பின் சுவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள ஆயிரக்கணக்கான குடல் உறிஞ்சுகள்(villi) உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
சிறு குடலில் இருந்தே உணவின் ஊட்டச்சத்த்துக்களை உட்கிரகிக்கும் பணி நடைபெறுகிறது.
உண்ட உணவு செரிமானம் ஆவதற்கான இரசாயன மாற்றங்கள்யாவும் சிறு குடலில் நிறைவடைகிறது.
உணவானது சிறு குடலை கடக்க சுமார் 6 மணி நேரங்கள் ஆகிறது.
🌹 சிறு குடலில் மூன்று பகுதிகள் உள்ளன.
1. முன் சிறுகுடல் : ( Duodenam)
25 To 30 செ.மீ நீளமுள்ள சிறு குடலின் முதல் பகுதியாகும்.
கணையச்சுரப்பியின் தலைப்பகுதியை சுற்றி S வடிவ வளையமாகச் சுற்றி வருகிறது.
✨ முன் சிறு குடலில் 2 செர்ப்பு நீர்கள் பாய்கின்றன.
1. கணைய சுரப்பிகளில் இருந்து கணைய நீர்.
2. கல்லீரலில் இருந்து பித்தநீர்.
(முன்னது பாதிக்கப்பட்டால் சர்க்கரை நோய்,பின்னது பாதிக்கப்பட்டால் காமாலை நோய். இதனை தனியாக பின்பு பார்க்கலாம்.)
2. இடை வெறுமையான குடல் :
23 செ.மீ நீளமுள்ள பகுதி.
3. சுருள் குடல் :
33 செ.மீ நீளமுள்ள பகுதி.
🌲பெருங்குடல் 🌲
(Large Intestine)
பெருங்குடல் சுமார் 1.5 மீட்டர் நீளமும், 6 செ.மீட்டர் விட்டமும் உள்ள ஒரு குழாய் ஆகும்.
சிறுகுடலை விட இது பெரிய அளவு விட்டமுடையது.
இதில் செரிப்புச்சுரப்பிகள் இல்லை.
பெருங்குடலின் முன்பகுதி சீகம் ஆகும்.இதில் இணைந்திருக்கும் சிறு குழாய்க்கு குடல்வால் (Appendix) என்று பெயர்.
சிறு குடலைப் போன்றே பெருங்குடலும் மூன்று அடுக்குகளினால் ஆனது.
1. சீகம் ( Cecun )
பெருங்குடலின் முதல் 10 செ.மீட்டர் வயிற்றின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள அகற்ற பை போன்ற பகுதியாகும்.
பக்கவாட்டில் இலியோ சீகல் வால்வின் மூலம் இது சிறுகுடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிறு குடலானது பெருங்குடலில் திறக்கிறது.
2. கோலன் :(Colon )
பெருங்குடலின் அடுத்த பகுதியான இது ஏறுகுடல், குறுக்குக்குடல், இறங்கு குடல், சிக்மாயிட் குடல் என பிரிக்கப்படுகிறது.
3. மலக்குடல் : ( Rectum )
பெருங்குடலின் கடைசி 10 செ.மீட்டர் நீளமுள்ள இது கூபகக் குழாயின் பின்புறத்தில் அமைந்து ஆசனக் குழாயுடன் முடிவடைகிறது.
பெருங்குடலின் பின் பகுதி மலக்குடலில் திறக்கிறது.
மலக்குடலானது செரிக்கப்படாத எஞ்சிய பொருட்களுக்கு ஒரு தற்காலிக சேமிப்புக் கிடங்காக செயல்படுகிறது.
💧ஆசனக்குழாய் :(Anus.)
பெருங்குடலின் குறுகிய பின் பகுதி மலப்புழைக்கால்வாய் எனப்படும். இக்கால்வாய் மலப்புழையில் திறக்கிறது.
ஆசன குழாய் சுமார் 4 செ.மீட்டர் நீளமுடையது. வெளிப்புறத் தோலில் இதற்கான திறப்பு ஆசனவாய் என அழைக்கப்படுகிறது.
இது சுருக்கு தசைகளினால் ஆக்கப்பட்டுள்ளது.
🌱மலம் கழித்தல் எவ்வாறு நிகழ்கிறது.
(Defaecation)
மலக்குடல் என்பது பெருங்குடலின் பின் பகுதியாகும்.
இது 15 முதல் 20 செ.மீ வரை நீளமுடையது. மலக்குடலின் சுவர் நான்கு அடுக்குகளாலானது.
1. முதல் அடுக்கு:
பாதுகாப்பு உறை படலம் (Serous Layer)
2. இரண்டாம் அடுக்கு:
தசை படலம் (muscular Layer)
3. மூன்றாம் அடுக்கு:
சளிச்சவ்வின் கீழ் படலம் (Submucous Layer)
4. நான்காம் அடுக்கு:
சளிச்சவ்வு படலம்:
மலக்குடலானது செரித்த பொருட்களின் வளர்சிதை மாற்ற கழிவுகள் மற்றும் செரிக்கப்படாத உணவுத் துகள்கள் போன்றவற்றிற்கான ஒரு தற்காலிக சேமிப்பு கிடங்கு ஆகும்.
இதன் குறுகிய பின்பகுதி மலப்புழைக்கால்வாய் ஆகும். இக்கால்வாய் மலப்புழையில் திறக்கின்றது.
மலப்புழையைச் சுற்றி மலவாய் சுருக்கிகள் இரண்டு உள்ளன. அவை, அக சுருக்கி , புறசுருக்கிகளாகும்.
மலப்புழையை சுற்றி கார் இரத்த குழல்களின் வலைப்பின்னல் உள்ளது.
பெருங்குடலில் மலமானது உற்பத்தியாகி பெருங்குடலின் ஒரு பகுதியாகிய சிக்மாய்டு கோலானில் (Sigmoid Colon ) சேமிக்கப்படுகிறது.
ஏதேனும் ஒரு தூண்டுதலின் படி சேமிக்கப்பட்ட மலமானது மலப்புழை வழியே வெளித்தள்ளப்படும். இதனை மலம் கழித்தல் நிகழ்வு என்பர்.
அவ்வாறு, தூண்டுதல் நேரிடாவிட்டால் மலவாய் சுருக்கிகள் சுருக்கிக் கொண்டு மலம் கழித்தல் தடைபடும்.
மலம் கழிதல் என்பது ஒரு அணிச்சை செயலாகும்.
மலமானது மலக்குடலுக்கு வந்து மலக்குடலினுள் உள்ள அழுத்தம்
(Intrarectal pressure ) காரணமாக மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
காபி, டீ, தண்ணீர் என சில வகை திரவங்களை உட்கொள்ளுதல் மலம் கழித்தலுக்கு தூண்டுதலாக அமையும். இத்தூண்டுதலானது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
🌱மலக்குடலில் என்ன நிகழ்கிறது.
மலக்குடல் மலம் சேர்வதால் விரிவடைதல்.
||
மலக்குடலிலுள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுதல்.
II
உணர்வு அலைகள் கூபக நரம்புகளின் மைய நோக்கு நரம்பு இழைகளால் கொண்டு செல்லப்படுதல்.
||
தண்டுவடத்தின் பீடிகை நரம்பு பாகத்தை அடைதல்.
(இதுவே மலம் கழிக்கும் உண்ர்வு மையம் )
||
கூபக நரம்புகளின் மைய விலக்கு நரம்பு இழைகள் மூலம் மோட்டார் கட்டளைகள் இறங்கு குடல், சுருள் குடல், மலக்குடல் ஆகியவற்றிற்கு அனுப்பப்படுதல்.
||
அதன் விளைவால், இறங்கு குடல், சுருள் குடல், மலக்குடல் ஆகியவற்றை சுருக்கம்.
|I
இதனால் மலவாயைச் சுற்றியிருக்கும் அக சுருக்குகள் தளர்வடையும்.
||
பின் மலவாயைச் சுற்றி இருக்கும் வெளி சுருக்கி தளர்வடைந்து மலத்தை வெளித்தள்ளும்.
இச்செயல்கள் அனைத்தும் தினம்தோறும் ஒரு தானியங்கி கருவி போல் செயல்பட்டு வருகின்றன.
✨மூலநோயின் இயல்பு✨
உணவு மற்றும் செயல் முதலியவற்றால் கீழ்வாய்க்கனல் (வெப்பம்) மிகுந்தெழுந்து வளிக் குற்றத்தைத் (வாயு ) தூண்டி கீழ்நோக்குங்காலைக் கெடுத்து இதன் மூலமாக அழல்(பித்தம்) குற்றத்தையும் தூண்டுவிக்கும்.
இவ்வாறு மிகுந்தெழுத்த அழலின் காரணமாக பசியானது கேடடைந்து உடல் மெலிந்து, ஏழு உடற்கட்டுக்களும் தன் வன்மையை இழந்து, மனநிலையையும் குறையச் செய்யும் இயல்புடைய நோயாகும்.
கீழ் குடலில் இருந்து ஆசன வாய் வரையிலுமுள்ள குடலின் கண்ணமைந்த கார் குருதிகள் (இரத்த நாளம்) ஏழில் ஏதேனும் ஒன்றாகிலும், பலவாகிலும் தாபிதப்பட்டு (Inflammation) வீங்கி ஆசன வாயில் எரிச்சல், நமைச்சல், அரிப்பு ஆகிய குறிகளைக் காட்டி, மலம் கழிக்கும் போது மலத்தை கட்டி மலம் போக முடியாது தடுத்தலும், அதனை முக்கி வெளியாக்க முயன்றால் வறண்டு,தீய்ந்து, இறுகிய நிலையில் குருதி நாளங்களைக் கீறிக் கொண்டு அதிலிருந்து கசியக்கூடிய இரத்தத்துடன் மலம் கழிதலும், முக்குவதற்கு ஏற்ப முளை வெளியாக்குதலும் எனும் இயல்புடைய நோயாகும்.
🌱மூல நோயின் வகைகள்:
நவீன மருத்துவ முறைப்படி மூலம் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
☄முதல் நிலை மூலம் :
மலம் கழித்த உடன் மலப்புழை வழியே இரத்தம் கழியும்.
இதனை உள்மூலம், இரத்த மூலம் என்பர்.
☄இரண்டாம் நிலை மூலம் :
மலம் கழிக்கும் பொழுது மலப்புழை வழியே மூலமுளை வெளியே வந்து விட்டு மலம் கழித்த பிறகு மூலமுளை மீண்டும் உள்ளே சென்று விடும்.
☄மூன்றாம் நிலை மூலம் :
மூலமுளையானது மலப்புழையின் வெளியே நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் மலம் கழிக்கும் பொழுது மலப்புழையில் மிகுந்த வலி, வேதனை, எரிச்சல், நமைச்சல் இருக்கும்.
✨சித்த மருத்துவம்:
1. உள் மூலம் :
மூலரோக முளைகள் உள்ளே இருக்கும்.
2. வெளி மூலம்:
மூலமுளைகள் வெளிப்பட்டிருக்கும்.
3. செண்டு மூலம் :
மூலமுளைகள்செண்டு போல் இருக்கும்.
4. இரத்த மூலம் :
மூலமுளைகளில் இருந்து இரத்தம் கசியும் .
5. சல மூலம் :
மூலமுளைகளில் இருந்து சலமும், சீழ் வடியும்.
6. ஆணி மூலம்:
மூலமுளைகள் ஆணிபோல் கடினமாக இருக்கும்.
7. கிரந்தி மூலம்:
மூலமுளைகள் கிரந்தியுடன் இருக்கும்.
🌲மூல நோய்வரக் காரணங்கள் :
☄ மலம் கழிக்கும் பழக்கத்தை சரியான நேரத்திற்கு முறையாக செய்யாமல் இருத்தல்.
(வேலை அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும் பொழுது அதனை அடக்குதல்).
♦ நீடித்த மலச்சிக்கல். கடினமான கெட்டிப்பட்ட மலத்தை கஷ்டப்பட்டு வெளியேற்றல்.
🔺 தண்ணீர் குறைவாக அருந்துதல்.
🔻உணவில் நார்சத்துள்ள உணவுகளை தவிர்த்தல்.
🔸பட்டினி கிடத்தல், அல்லது தேவைக்கதிகமாக உணவு உண்பவர்கள்.
🔹மிகுந்த காரம், மசாலா, எண்ணெய் பலகாரம், போன்றவற்றை அதிகமாக உண்ணுதல்.
🔶உடல் உஷ்ணத்தை பெருக்கக் கூடிய உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ளுதல்.
🔷கிழங்கு வகைகளை அதிகமாக உண்ணுதல். (கருணைக் கிழங்கு தவிர)
❣யோக நிலையில் தன் வன்மைக்கு மிகுதியாக நிலைத்திருத்தல், மூச்சை அடக்குதல் .
🔺வெப்பம் நிறைந்த சூழலில் பணி புரிதல். ( சமையல்கார், பாய்லர், பேக்கரி ஓவன்)
☄ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்த்தல்.( டைலர், டிரைவர், )
🔻சுருள் குடலில் ஏற்படும் பிடிப்பு.
❣கர்ப்பகாலம்.
(பெண்கள் கருத்தரித்துள்ள போது சூலானது பெருகப் பெருக கீழ்க்குடல் அழுத்தப்படும் போதும், பெருவயிறு நோய் முதிர்ந்து வயிறு மிகப் பெரியதாகும் போதும் இந்நோய் ஏற்படலாம்).
♦பரம்பரை காரணமாக தாய், தந்தையின் வழியாகவும் வருவதுண்டு.
🔹நவீன மருத்துவத்தில் அதிகுருதி அழுத்தம் (BP), வலிப்பு (Fits),
மன அழுத்தம் (Stress And Strain),
நடுக்குவாதம், போன்ற நோய்களுக்கு தரப்படும் மருந்து மற்றும் வலி நிவாரண்கள்,
சிறுநீர் பெருக்கிகள் (Diuretic) போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துதல்.
♦பிற நோய்களினால் தாக்கப்படுள்ள பொழுது உட்கொள்ளும் மருத்துகள் மற்றும் அந்நோயின் காரணமாக உடலில் உள்ள பாதிப்புகளை தொடர்ந்தும் இந்நோய் ஏற்படலாம். (டைபாய்டு காய்சல், மஞ்சள் காமாலை, அம்மை)
😳 மூல நோயின் குறிகுணங்கள்:
☄ இந்நோய் தொடங்கும் முன்பு முற்குறி குணங்களாக மலத்தை கட்டுதல், எருவாயிலிருந்து அடிக்கடி காற்று பிரிதல்.
இதனால் பசித்தீயானது குறைந்து செரியாமை, வயிற்றுள் காற்றுசேருதல் (Gas ), ஆசனவாயில்(மலப்புழை) எரிச்சல், அரிப்பு , நமைச்சல் முதலிய குறிகுணங்களையும் காட்டும்.
🔹மலம் கழிக்கும் போது ஏதோ அடைப்பது போல் தோன்றும்.
🔻மலம் கழிக்கும் பொழுது கடுமையான வலி உண்டாகும்.
🔸மலம் கழிக்கும் போது சில சமயம் இரத்தம் அல்லது சீழ் வருதல். (இரத்தம் பீறிட்டு வருவதும் உண்டு - இரத்த மூலம்)
🔺உட்காருவதில் சிரமம் இருத்தல்.
🔶ஆசனவாய் முளை இவ்வாறு வெளிவருவதும், உள்ளடங்குவதுமாக தன் அளவிலும், பருமனிலும் பெருத்துக் கொண்டே வந்த பின், கீழிறங்கிய முளை மீண்டும் உள்ளுக்குப் போகாமலே நிலைத்து விடுவதும் உண்டு. (வெளி மூலம்)
🔷இவ்வாறு நிலைத்த முளையானது ஆசனவாய் சுருங்கும் போது தாங்க முடியாத வலி மற்றும் இரத்தப் போக்கை உண்டாக்கி துன்புறுத்தும்.
♦இறுதியில் உடல் மெலிந்து, வன்மை குறைந்து, மனம் தளர்ந்து , அடிக்கடி கோபம் கொண்டு சீறி விழச்செய்யும்.
🔸முகமும் வேற்றுமையடைந்து விளக்கெண்ணெய் பூசியது போலக் காணப்படும்.
🔺தக்க மருத்துவம் செய்யாவிடில் உயிரையும் போக்கும் இயல்புடைய நோயாகும்.
🌱மூல நோய் நிவாரணம்
வாத பித்த தொத்தமல்லாது மூலம் வராது.
இது சித்தர்கள் பாடல்.
அதாவது உடலில் வாதம் (வாயு ) + பித்தம் (உஷ்ணம்) இவை இரண்டும் கலந்து அதிகம் ஆகாது இருப்பின் மூலம் என்னும் நோயே வராது.
எனவே நாம் உண்ணும் உணவில் உடல் உஷ்ணத்தையும், வாதத்தையும் அதிகரிக்க செய்யும் உணவுகளை தவிர்த்தும்,
உடல் உஷ்ணம் அடையாமலும், மலச்சிக்கல் இல்லாமலும் பாதுகாத்துக் கொண்டாலே மூல நோய் பற்றிய பயம் இல்லை.
🍓உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் வாயு பதார்த்தங்கள் :
காரம், மசாலா, அசைவ உணவுகள்,
மீன், கோழி, கருவாடு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, தட்டைப் பயிறு, மொச்சக்கொட்டை, கொண்டை கடலை, காளிஃபிளவர், முட்டைக்கோஸ்,
முட்டை (மஞ்சள் கரு), புளிக்குழம்பு, புளியோதரை, புளிச்சக்கீரை, எண்ணெய்யில் வறுத்த + பொரித்த பலகாரங்கள், வடை, போண்டா, பஜ்ஜி, பப்ஸ்,புரோட்டா (மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுகள்)
👆மேற்கண்ட இந்த உணவுகளை ஒரு மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் கதை முடிந்தது. மறுநாள் நரக வேதனை தான்.
ஆகையினால் மேற்கண்ட இந்த உணவுகளை நீக்கியும் , மூல நோயை குணமாக்கக் கூடிய உணவுகளை உணவாக உண்டும் வர விரைவில் மூல நோயில் இருந்து நிவாரணம் பெறலாம்.
🌲 மூல நோய் நீங்கும் மூலிகைகள் மற்றும் உணவுகள்:
கருணைக் கிழங்கு
நத்தைக் கறி
சோற்றுக் கற்றாழை
துத்தி இலை
நிலாவரை
பிரண்டை
நாயுருவி
வெந்தயம்
கருவேப்பில்லை,
மாம்பருப்பு
ஓமம்
மாதுழை ஒடு
அதிமதுரம்
அம்மான்பச்சரிசி
தேத்தான் கொட்டை
திரிபலா ( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)
🔺நார்சத்து அதிகமுள்ள கீரைகள், பழங்கள், காய்கள் குறிப்பாக,
துத்திக் கீரை,
தாளிக் கீரை, பசலைக்கீரை,
புளியாரைக் கீரை,
துயிலிக் கீரை,
சுக்கான் கீரை, வெந்தயக்கீரை, அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், வெள்ளை பூசணிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய்,
பப்பாளி பழம், வாழைப்பழம்,
ஆரஞ்சு பழம்,
உலர் திராட்டை, அத்திப்பழம்,
கொய்யப் பழம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்து குளிக்க வேண்டும்
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment