Wednesday, May 31, 2017

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

ஹெல்த்

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

Last Updated : 28-05-2017 19:26:08

நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

 

This article will continue after this advertisement

கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும். 

பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம். 

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம் ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

நுரையீரல் - இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

 

கல்லீரல் - மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

 

மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

பாதம்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

பாதம், விரல் வலி சரியாகும்.
 

Published Date : 28-05-2017 18:12:53

Friday, May 19, 2017

சக்கரை நோயை வெல்ல… உணவுமுறை…

சக்கரை நோயை வெல்ல… உணவுமுறை…

இன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.

1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இந்த வகை சர்க்கரை நோய்க்கு IDDM (Insulin dependent diabetes mellitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடியது.

2. உடலில் இன்சுலின் உற்பத்தி தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படும் பாதிப்பு இரண்டாம் வகை சர்க்கரை நோய். இதை NIDDM (Non Insulin dependent diabetes Mellitus)என்று பெயர்.

இந்த இரண்டாவது வகை சர்க்கரை நோயின் பாதிப்புதான் மேற்கண்ட உணவுமுறை மாறுபாடு, உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்பின்மை இவற்றால் வருவது. இதுதான் இந்திய மக்களை அதிகமாக பாதிக்கும் சர்க்கரை நோயாகும். இந்த நோயை சித்தர்கள் மதுமேகநோய் என்று கூறுகின்றனர்.

சர்க்கரை நோயின் பாதிப்பு வராமலும், வந்த பின் அதை கட்டுப்படுத்தவும் முறையான உணவு முறையினை கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ஏதும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது சோதித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 110 மி.லி.க்கு குறைவாக இருக்க வேண்டும்.

சாப்பிட்டு 1 1/2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு 140 மி.லி. க்கு குறைவாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உடனே ஏற்படும் நோயல்ல. குடும்பத்தில் சர்க்கரை நோய் யாருக்காவது இருந்தால் அவர்கள் 30 வயதுக்குமேல் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் மருந்துகள் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

சமச்சீரான உணவு

சர்க்கரை நோயாளிகள் சமச்சீரான உணவில் கவனம் செலுத்துவது அவசியம். புரதம், கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் இவற்றை போதுமான அளவு சேர்த்து வருவதே சமச்சீரான உணவாகும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள சமச்சீரான உணவை இனி பார்ப்போம்.

தானிய வகைகள்

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள் உணவுக்கு உகந்த தானியங்களாக இப்போது நடைமுறையில் உள்ளன. இதில் அரிசியைவிட கோதுமையில் புரதச் சத்து அதிகம். மேலும் தானிய வகைகளில் கூடுதல் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மிகுந்துள்ளதால் உணவு மெதுவாக சீரணம் ஆகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

அரிசி சாதம்தான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான கருத்தாகும். தவிடு நீக்கப்பட்ட அரிசிதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். அனால் தவிடு நீக்காத கைக்குத்தல் அரிசி மிகவும் சிறந்த உணவாகும்.

கோதுமை, ராகியிலும், அரிசி போன்றே 70 சதவிகிதம் மாவுச்சத்து நிறைந்துள்ளது. தானியங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

பருப்பு வகைகள்

உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்துள்ளது. அதுபோல் முளை கட்டிய பயறு வகைகளையும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் பி மற்றும் சி சத்து குறிப்பிடத்தக்க வகையில் இதில் உள்ளது.

காய்கறிகள்

சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குறைந்த கலோரியில் அதிக சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் காய்கறிகளுக்கு உண்டு. காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக வைட்டமின் சி, கால்சியம், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம், காய்கறிகளில் உள்ளதால் அவை உடலுக்கு வலுவைத் தரக்கூடியவை.

சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்கள் தினமும் அதிகபட்சம் 400 கிராம் அளவுக்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும். காய்களில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைப் போக்குகிறது. உணவு இடைவேளைகளில் பசியெடுத்தால் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். தோல் நீக்காமல் நன்கு நீரில் சுத்தம் செய்து அவைகளை சாப்பிட்டால் அவற்றின் ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளை முள்ளங்கி, கத்தரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், சௌ சௌ, கொத்தவரங்காய், முருங்கை காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், கோவக்காய், வெங்காயம், பூண்டு, பப்பாளிக்காய் போன்ற காய்களும், அரைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, குறிஞ்சாக் கீரை, குப்பைக் கீரை, ஆரைக்கீரை போன்ற கீரை வகைகளும் சாப்பிடலாம்.

காய்கறிகளில் காரட், பீட்ரூட், பட்டாணி, ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தலாம். நன்கு கடைந்த மோரில் நீர் பெருக்கி அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். மிளகு ரசம் மிகவும் நல்லது.

வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய் இவைகளை சாலட்டாக சாப்பிடலாம்.

பழங்கள்

பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, கொய்யா, பேரிக்காய், பப்பாளி, நாவல் பழம் போன்றவற்றை குறைந்த அளவு சாப்பிடலாம். பழங்களை ஜூஸ் செய்யாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவு

முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடுவது நல்லது. அதுபோல் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் மூலம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக கிடைக்கிறது. இது உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது. மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் இருமுறை 100 முதல் 200 கிராம் வரை மீன் சாப்பிடலாம்.

எண்ணெய் வகைகள்

உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். ஆனால் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

தவிர்க்க வேண்டிய பொருட்கள்

உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை, தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், குளிர் பானங்கள், மதுபான வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டா, காம்பளான், போன்ற சத்துப் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை சேர்க்காத பிஸ்கட் வகைகளை சாப்பிடலாம்.

சுத்திகரிக்கப்பட்ட மைதா, ரவை, சேமியா போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பழங்களில் மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம், சீதாபழம், பேரீச்சம் பழம், அத்திப்பழம், திராட்சை போன்ற பழவகைகளை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவில் ஆட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி இவற்றை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் வகையில் நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

காலை முதல் மாலை வரை

காலை எழுந்தவுடன் சர்க்கரை சேர்க்காமல் காபி அல்லது டீ, பால் சாப்பிடலாம். காலை 8 மணிக்கு டிபனாக இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பிடலாம். அல்லது கேழ்வரகு உணவு வகைகளை சாப்பிடலாம்.

மதிய உணவுக்கு முன்பு அதாவது 10.30 மணி அளவில் சர்க்கரையின்றி எலுமிச்சை ஜூஸ், நீர் விட்டு கடைந்த மோர், காய்கறி சாலட் சாப்பிடலாம்.

12.30 மணிக்கு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காய் பொரியல், கீரை, சாலட், முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து சாப்பிடலாம்.

பிற்பகல் மூன்று மணிக்கு சர்க்கரை இல்லாத காபி, அல்லது டீ மற்றும் சுண்டல் அல்லது காய்கறி சாலட். சாப்பிடலாம்.

இரவு 8 மணிக்கு கோதுமை ரொட்டி, அல்லது கேழ்வரகு ரொட்டி சாப்பிடலாம்.

படுக்கைக்கு செல்லும் முன் பால் அருந்துவது நல்லது. உணவை அளவாக சாப்பிட வேண்டும். வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது. நீர் அதிகம் அருந்த வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி, தியானம், யோக போன்றவற்றை செய்து வந்தால் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.





ALEXANDER:

9766540761

(மும்பை) 

Sunday, May 14, 2017

WRAP YOUR FEET IN ALUMINUM FOIL AND WAIT FOR 1 HOUR! WHAT HAPPENS NEXT WILL SURPRISE YOU!

NATURAL CURES NOT MEDICINE

WRAP YOUR FEET IN ALUMINUM FOIL AND WAIT FOR 1 HOUR! WHAT HAPPENS NEXT WILL SURPRISE YOU!

Aluminum foil is one of the most common household items around the world.

It is believed that its uses are limited only to the kitchen, since there we all use it mostly for storing food.

It is a type of heavy-duty paper which maintains the temperature of the food like this, for example: if we put a warm sandwich, it will remain so for a long period of time.

Another function of this aluminum foil is that we can perform works of craft with it and it is very useful for recycling.

Today, we must always be alert to maintain the environment in perfect condition and we must all learn that almost all of the elements that we have at home can be recycled.

Very few people know all the usages that aluminum foil can have on the human body, but even though it sounds unbelievable, it can prevent your health. This material is very useful for relieving colds and burns.

In this article, we’re going to present you several of the best advantages aluminum foil can have for you. Here’s where you can use it! Try them out today!

End colds!

Colds are one of the most common problems human beings suffer from nowadays. The cold weather, the humidity and abrupt climate change cause us to get sick. To relieve colds naturally you can use aluminum foil! Just wrap your feet in 5-7 sheets of aluminum foil and leave it like that for about 1 hour. The paper has anti-inflammatory properties and can help you alleviate some of the symptoms of a cold.   Let your feet breathe for 2 hours and repeat the process. You will notice improvement in a couple of days. You should certainly visit your doctor if your symptoms last for more than one week.

No more fatigue!

A few hours of sleep or a stressful day can leave you exhausted, even if you have a thousand things to do at home. Aluminum foil can help you regain energy to face the day again! Cut some strips of aluminum foil and put them in the freezer. Remove them after 2-3 hours and put them on your cheeks and eyelids! You’ll feel refreshed immediately!

Relieve skin burns!

American studies recommend this! First, you have to put some water on the burn, carefully cleaning the wound, and dry it with a clean towel. After applying a layer of ointment, put a clean gauze over the wound and then wrap it in aluminum foil. Tighten it with some adhesive tape. Try not to move and you’ll see that the pain will start to disappear!

Improve the pain in your joints !

Wrap some aluminum paper on the part of the body that you feel pain and try to limit your movements. Leave it like that throughout the night or throughout the whole day. Repeat the procedure for 10 days and then wait for 2 weeks before you repeat the process.

Thursday, May 11, 2017

Spinal Nerves

Peripheral Nervous System: Spinal Nerves and Plexuses

We have 31 pairs of spinal nerves and they are named after the section of the spine they come out of.

8 pairs of cervical nerves (C1-C8)12 pairs of thoracic nerves (T1 – T12)5 pairs of lumbar nerves (L1-L5)5 pairs of sacral nerves (S1-S5)1 pair of coccygeal nerves (Co1)

Why do we have an 8th pair of cervical nerves if we only have 7 cervical vertebrae you ask?  Well because we start at the top of the atlas and all the nerves are in between the vertebrae so the 8th pair is in between C7 and T1.

Note the difference between roots and rami (ramus is singular).  The rootlets extend out of the spinal cord medially and combine to form roots. The roots combine to form the spinal nerve and then they split apart again and are now called rami (ramus for singular).  The dorsal root is posterior to the ventral (front) root.

The dorsal rami innervate the deep muscles of the back for motor control, such as the erector spinae and also a horizontal strip of skin for sensory input.

The ventral rami in the thoracic region are known as the intercostal nerves.  They run deep to the ribs and innervate the intercostal muscles and provide sensory input for the overlying horizontal strips of skin there as well as the abdominal wall muscles (motor) and skin (sensory).  The innervation of the back, ribs, and abdominal area is shown here:

 

Nerve Plexuses

A nerve plexus is a network of nerves that seem to be tangled that mostly serve the limbs. Each network is a network of nerves that come together and then redistribute themselves out with a different distribution of nerves into the limbs.  They are made from the rest of the ventral rami (that is, from other than the thoracic region that we haven’t talked about yet).  Each end of each plexus contains fibers from several spinal nerves.  The fibers from each ventral ramus travels along different routes so that each limb muscle receives innervation from more than 1 spinal nerve to have a backup plan in case of injury.

We have four plexuses:  Cervical, Brachial, Lumbar, and Sacral

Cervical Plexus

This plexus is located underneath the sternocleidomastoid muscle (from C1 – C4). Most of the branches innervate the skin of neck and deep neck muscles.  The Phrenic nerve (C3, C4, C5) gets special mention that innervates the top of the diaphragm (after traveling down through thoracic cavity, along either side of the heart).  Note that if both phrenic nerves are cut or if the spinal cord is severed above C3, breathing stops.

The Brachial Plexus

This plexus gets contribution from the transitional area from neck into armpit (axilla) between C5 and T1.  It provides almost all the innervation of the upper limb (this includes back and scapular muscles that control the limb).  The organization of this plexus is also very messy.  There’s mixing of branches and then a branching of branches and then mixing again. Note how there’s divisions, trunks and roots.

Five nerves innervate the muscles of the arm:

Musculocutaneous innervates the biceps brachii and some overlying skin. (C5, C6, C7)Median innervates anterior forearm muscles, some intrinsic hand muscles, and skin of lateral (anatomical position/toward thumb) palm. (C5, C6, C7, C8, T1)Ulnar innervates intrinsic hand muscles and skin of the medial hand. (C8, T1)Radial travels along radius and innervates Triceps brachii and muscles of the posterior compartment, and overlying skin. (C5, C6, C7, C8, T1)Axillary innervates the deltoid and teres minor, and overlying skin. (C5, C6)

The Lumbar Plexus

This plexus lies within the iliopsoas muscle and comes from between L1 and L4.  The main branches innervate the anterior thigh.  Smaller branches innervate some of the abdominal wall and iliopsoas muscle.

Femoral nerve — innervates quadriceps femoris muscle and overlying skin

Obturator nerve — innervates adductor muscles and overlying skin

The Sacral Plexus

The sacral plexus lies caudal to the lumbar plexus (stems from L4 to S4) and is often referred together withthe lumbar plexus as the lumbosacral plexus.  The branches innervate buttocks, pelvis, perineum and lower limb (except for anterior and medial thigh).

Sciatic nerve, the largest nerve of the sacral plexus is actually two nerves wrapped in one sheath:

Tibial nerve (L4,L5,S1,S2,S3) innervates posterior thigh, posterior leg (lower leg), and intrinsic muscles of foot

Common fibular (peroneal) nerve (L4,L5,S1,S2) innervates muscles of the anterolateral leg (lower leg)


Monday, May 8, 2017

நொறுங்க தின்றால் நூறான்டு வாழ்வ

"நொறுங்க தின்றால் நூறான்டு வாழ்வு"

                     Health Tips:  
சர்க்கரை நோய்க்கான எளிய முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!
உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!
நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!
அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!எனவே நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!
இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் விடமாட்டார்கள். அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.
நொறுங்கத் தின்னா நூறு வயசு..

Monday, May 1, 2017

மலர் மருந்து

ALEXANDER: மலர் மருந்து!!!

மலர் மருந்து தேர்வு பேசத்தெரியாத குழந்தைகளுக்கு மருந்து தேர்ந்தெடுப்பது எப்படி?

பேசத்தெரிந்தவர்களிடம் அவர்களின் மனக்கோளாறுகளை, உடல் கோளாறுகளை கேட்டறிந்து விடுகிறோம். ஆனால் பேசத்தெரியாத குழந்தைகளுக்கு எப்படி மருந்து கொடுப்பது?

குழந்தைகள் பொய் சொல்லத் தெரியாதவர்கள் அவர்களின் நடவடிக்கைகளே , உடல் அசைவுகளே, அவர்களுடைய உண்மையான இயல்புகளை காட்டிவிடும்.

உதாரணமாக ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டால், அதனிடம் விளையாடினால் பேசாமலிருக்கும். இது சிக்கரி என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டிய குழந்தையாகும்.

மற்றொன்று குழந்தை, எதை கண்டாலும் பயந்து வீச்சென்று கத்தும், தன் வீட்டிலுள்ள பூனை, நாய், கன்றுபசு என எதைக் கண்டாலும் பயந்து நடுங்கும்.

யாரேனும் புதிய உறவினர்கள் வந்தாலும் அவர்களைக் கண்டதும் கதறி அழும் .

இதற்கு “மிமுலஸ் எனும் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.


மற்றொரு குழந்தை எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காது. போட்டது போட்டவாக்கில் எந்த நேரமும் தூங்கிக்கொண்டேயிருக்கும்.


பசி எடுக்கும் ஆனால் பால் குடிக்க ஆர்வம் இருக்காது. இப்படிப்பட்ட குழதைக்கு “க்ளமாடிஸ்”என்னும் மருந்து கொடுத்தால்-நல்ல குணமாகும். எனவே இது போன்றே இம்மருந்துகள் ஒவ்வொருவருடைய மனநிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுகிறது.


மனநிலைக்கு மருந்து கொடுப்பதினால் உடல் நலமும் ஏற்படுகிறது.

மனிதரின் மனக்குறிகளுக்கேற்ற மலர் மருந்து

அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.எல்லாவற்றையும் இழந்து, அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர்.


அவர்களுக்கும் உடல் உபாதைகள். அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் .

அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”அறிவிருக்கும், அவர்களிடம் திறமையும் இருக்கும்.

ஆனால் பொறுமையிருக்காது. அதனால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார். சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார். அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார். இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும்.


எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி, நாள், வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் . எதற்கும் லாயக்கல்ல. எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.



கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார், ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார். உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார். அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார். அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும், உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்”


.எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார். அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு . அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார். அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”

இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான். அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர். இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.


எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர், இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார். இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம்.

அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.

எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர், அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும். அப்படிப்பட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.

மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார். கவலைப்பட மாட்டார். இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.

தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார்.


அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார். தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.

இவரின் மனநலத்தை , உடல்நலத்தை , இவரால் கட்டுப்படுத்த முடியாது.


நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர். இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”.


போதுமான வயது இருக்கும், ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது. நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது. அப்படிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.


தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர். மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர்.
அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள
வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர். எதிர்பார்ப்பு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநிலை பாதிக்கும். அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.


தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு. அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.


தன்னையும், தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.


பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்”.இயற்கை சீற்றங்களுக்கும், மற்றவர்களின் மிரட்டல்களுக்கும் பீதியடைபவர்.


சின்ன சின்ன விவசாயங்களுக்கெல்லாம் பீதியடைவார்.

அவரை தேற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“ராக்ரோஸ்”.தன்னளவில் கடுமையான ஆச்சாரங்களை கடைபிடிப்பவர்.

கல் மனம் என்பார்களே, அவர் மனமும் அப்படிதான். அவருக்குரிய மலர் மருந்து-“ராக் வாட்டர்”.


தன் துயரம் கண்டுகொள்ளமாட்டார். ஆனால் தம் உற்றார் உறவிர்களின் துன்பம் கண்டு கலங்குபவர். என்னாகுமோ என பயப்படுபவர்.

இவருக்குரிய மலர் மருந்து “ரெட் செஸ்ட் நட்”.நோய் எதிப்பு ஆற்றல் அறவே அற்றவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வால் நட்”.


தன்னைவிட யார் உயர்ந்தவர்-தனக்குள் அடக்கம் தான் யாவரும் என்ற எண்ணமுடையவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வாட்டர் வயலட்”.

பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரி. இவருக்கேற்ற மலர் மருது “வைன்”.


கொஞ்சம் கூட சளைக்கமாட்டார். ஓய்வே தேவைப்படாது. அதுவும் அதிக ஆர்வத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருப்பார். இவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து ”வெர்கூஷவன்”.


பிறரை குற்றம் சொல்வதே வேலை. ஆனால் தான் கற்றுக் கொள்ளாதவர். தன் தவறுகளை திருத்திக்கொள்ள மறுப்பவர். அவரை நியாயப்படுத்தி பேசுபவர் கொஞ்சம் கூட மாறமாட்டார். ”வில்லே” என்ற மலர் மருந்து கொடுத்தால் இவரை மாற்றி விடும்.


தனக்கு ஏற்படும் சாதாரண தோல்விகளையும், தடைகளையும் கண்டு கலங்கி துவண்டு போய்விடுவார். ” ஜென்சியன்”என்ற மலர் மருந்தை இவருக்கு கொடுத்தால் தேறிவிடுவார்.கடந்தகால சம்பவங்களை நினைத்து வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து ”ஹனிசக்கிள்’.”ஹார்ன்பீம்” என்ற மலர் மருந்து மிக அதிக அளவில் சக்தியை இழநதவர்களையும், மனச்சோர்வு உடையவர்களையும் தேற்றிவிடும்.எதிலும் முன்னெச்சரிக்கை உடையவர். கொஞ்சம் கசப்பு, வெறுப்புடன் பழகுபவர். இவருக்குரிய மலர் மருந்து”ஹால்லி”.


சாவு இடத்திலே கூட தன்னைப்பற்றியே பேசுவார். ”ஹீதர்”என்ற மலர் மருந்து அவரை அற்புதமாக மாற்றி விடும்.


இரண்டு மனதிற்கு சொந்தக்காரர். குழப்பத்திலே மிதப்பவர். ”ஸ்கிளராந்தஸ்” என்னும் மலர் மருந்து அவரை மாற்றிவிடும்.அதிர்ச்சிக்குள்ளானவரை “ஸ்டார் ஆப் பெத்லஹேம்” என்ற மலர் மருந்து அற்புதமாக மாற்றிவிடும்.


உதவி செய்யத் தெரியாமல், உதவப்போய் தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்பவர்களை- “பைன்” என்ற மலர் மருந்து தேற்றிவிடும்.



எந்த துயரம் வந்தாலும் யாரையும் அழைக்கமாட்டார். ஏன் இறைவனையும் அழைக்கமாட்டார். “ஸ்வீட் செஸ்ட்நட்”என்னும் மலர் மருந்து அவருக்கு ஆறுதல் சொல்லும்.                       
[1:04 AM, 10/14/2016] ALEXANDER: ★★★